MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கோடை காலத்தில் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க.. செரிமான பிரச்சனைகள் ஏற்படும்..

கோடை காலத்தில் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க.. செரிமான பிரச்சனைகள் ஏற்படும்..

கோடை காலத்தில் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவதால் பல பிரச்சனைகளை ஏற்படக்கூடும்.

2 Min read
Author : Ramya s
Published : May 03 2024, 07:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Summer food

Summer food

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வெயில் காலத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் சில உணவு சேர்க்கைகள் நமது செரிமான அமைப்புக்கு பிரச்சனையாக இருக்கலாம், இதனால் நாம் மந்தமாகவும் சங்கடமாகவும் உணர்கிறோம். இது வீக்கம் மற்றும் பல செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மேலும் கோடை காலத்தில் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவதால் பல பிரச்சனைகளை ஏற்படக்கூடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

அதிக புரதம் கொண்ட உணவுகள்: தயிர் அல்லது சீஸ் போன்ற உயர் புரத உணவுகளுடன் பழங்களை சேர்த்து சாப்பிடக் கூடாது. அது செரிமான அழுத்தத்திற்கு வழிவகுக்கும். பழங்களில் இயற்கையான சர்க்கரை அதிகமாக உள்ளது, அவை விரைவாக ஜீரணிக்கின்றன, அதே நேரத்தில் புரதம் செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும். இந்த ரண்டையும் ஒன்றாக சேர்த்து உட்கொள்ளும் போது, அவை செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

​​​​​​​

36
Image: Freepik

Image: Freepik

அமில உணவுகளுடன் கூடிய மாவுச்சத்துள்ள உணவுகள்:

கோடையில் பெரும்பாலும் வினிகர் அல்லது சிட்ரஸ் பழச்சாறுகளை பலரும் குடிப்பார்கள். ஆனால் அத்துடன் சிலர் சாலட்களை சேர்த்து சாப்பிடுவார்கள். ஆனால் இந்த அமிலச் சேர்க்கைகள் சுவையை அதிகரிக்கும் அதே வேளையில், மாவுச்சத்துள்ள உணவுகளுடன் அவற்றைச் சேர்ப்பது செரிமானத்தை சீர்குலைக்கும்.

46
watermelon

watermelon

தர்பூசணி மற்றும் பால்:

தர்பூசணிகள் பொதுவாக கோடைகாலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு. தர்பூசணியில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் அது வெயில் காலத்திற்கு ஏற்ற உணவாக கருதப்படுகிறது. ஆனால் பால் பொருட்களுடன் சேர்த்து தர்பூசணியை சாப்பிடுவதால் செரிமானத்தை சீர்குலைப்பதுடன் வாயு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

56
Cool drinks summer

Cool drinks summer

உணவுடன் குளிர் பானங்கள்:

கோடையில் குளிர்ச்சியாக இருக்க குளிர் பானத்தை பருகுவது ஒரு பொதுவான வழியாகும், ஆனால் உணவுடன் செயற்கை குளிர்பானங்களை குடிப்பது செரிமானத்தை தடுக்கும். செரிமானத்தை ஆதரிக்க, உணவின் போது அறை வெப்பநிலையில் இருக்கும் பானங்களை குடிப்பது நல்லது.

66

அமில பழங்கள் கொண்ட இனிப்பு பழங்கள்:

ஆரஞ்சு அல்லது அன்னாசி போன்ற அமில பழங்களை வாழைப்பழங்கள் போன்ற இனிப்பு பழங்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இது செரிமான கோளாறுகளை வழிவகுக்கும். கோடை காலத்தில் பழங்களை அனுபவிக்க, ஒரே மாதிரியான அமிலத்தன்மை கொண்ட பழங்களை சாப்பிடுவது நல்லது.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
உணவு சேர்க்கைகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved