ப்ரீ வெடிங் நிகழ்ச்சியில்.. ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்த ஆனந்த் அம்பானி ! பலரும் பார்த்திடாத Unseen போட்டோஸ் இதோ
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட சில அன்சீன் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் இவரின் காதலி ராதிகா மெர்ச்சண்ட்டிற்கும் ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், இவர்களின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்ட கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே களைகட்ட துவங்கி விட்டது.
இதன் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் மாதம் அனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குஜராத்தில் உள்ள ஜாம் நகர் பகுதியில் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. ஆனந்த் - ராதிகா ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதே போல் ஹாலிவுட் பாப் பாடகி ரிஹானாவும், கலந்து கொண்டனர். இவரின் நிகழ்ச்சிக்காக 50 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படட்டது. தமிழகத்தில் இருந்து இயக்குனர் அட்லீ அவரின் மனைவி மற்றும் மகனுடன் கலந்து கொண்ட நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தன்னுடைய மனைவி மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவர்களை தவிர விளையாட்டு பிரபலங்கள் மட்டுமின்றி சர்வதேச பிரபலங்களும் கலந்து கொண்டனர். மிகவும் பிரம்மாண்டமாக நடந்த அனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வு பேசு பொருளாக மாறியது.
இதை தொடர்ந்து கடந்த மாத இறுதியில் அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ஜோடியின் 2-வது ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் இத்தாலியில் ஒரு சொகுசு கப்பலில் நடந்தது. 3 நாள் நடந்த இந்த கொண்டாட்டத்தில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மூன்று நாள் நிகழ்வுக்கு ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்த உடைகள் தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகின்றன.
Radhika Merchant and Anant Amban
ஏற்கனவே ஆனந்த் தனக்கு எழுதிய காதல் கடிதத்தை பிரிண்ட் செய்து ஒரு உடையாக மாற்றி... ராதிகா மெர்ச்சண்ட் வியக்க வைத்தார். அதே போல் தங்கத்தால் செய்யப்பட்ட... மாடர்ன் உடை ஒன்றையும் அணிந்து அசத்தினார்.
இதை தொடர்ந்து கண்ணாடி இழைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது போல்... ட்ரான்ஸ்பரெண்டாக இருக்கும் பிங்க் நிற உடை ஒன்றை அணிந்திருந்தார். இந்த உடை பார்க்கவே பிரமிக்கும் வகையில் இருப்பதோடு, ராதிகா மெர்ச்சண்ட் அழகையும் மெருகேற்றியுள்ளது.
இந்த உடையில், தன்னுடைய காதலன் ஆனந்த் அம்பானி மார்பில் சாய்ந்தபடி ரொமான்ஸ் செய்தது அல்டிமேட் அழகு எனலாம். இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.