இந்த பக்கம் டிடிஎப்... அந்த பக்கம் செந்தில் பாலாஜி - புழல் சிறை அனுபவங்களை பகிர்ந்த ரவீந்தர் சந்திரசேகரன்
புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், சிறை அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
TTF vasan, ravindar, Senthil Balaji
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் பண மோசடி வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவித்த அவர், கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்ததும் அங்கு தான் பட்ட கஷ்டங்கள் குறித்தும், சிறையில் டிடிஎப் வாசன் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு சிறப்பு வசதி வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் மனம் திறந்து பேசி உள்ளார்.
Ravindar
அவர் கூறியதாவது : “சிறையில் இருக்கும்போது நரக வேதனை அனுபவித்தேன். பாத்ரூம் போவதற்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. கீழ உட்கார்ந்தா எழுந்திருக்க முடியாது. அதுக்கு 2, 3 பேர் உதவி வேணும். ஒவ்வொரு முறையும் அடுத்தவங்களை தொந்தரவு பண்ணக்கூடாதுனு நானே செவுத்தை பிடிச்சு தவழ்ந்து தவழ்ந்து தான் போனேன். சிறையில் முட்டி போட்டு முட்டி போட்டே என் முட்டியே கொளஞ்சி போச்சு. எனக்கு சிறப்பு வசதி கிடைக்காமல் போனதுக்கு காரணம் என்னுடைய எதிர் தரப்பு தான். அவர்கள் பார்த்த வேலையால் தான் எனக்கு அது கிடைக்கவில்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Senthil Balaji
எல்லா பிரபலங்களுக்கு சிறையில் எல்லா வசதியும் கிடைக்கும்னு சொல்றது தவறானது. செந்தில் பாலாஜி சாருக்கு புஹாரில இருந்து பிரியாணி வருது, அது வருது இது வருதுனு வெளில பேசிக்கிறாங்க. ஆனா உள்ள அவர் ரொம்ப எளிமையான வாழ்க்கை வாழ்கிறார். ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு தான் இருக்கார். ஜெயில்ல மத்தவங்க என்ன சாப்பிடுறாங்களோ அதை தான் அவரும் சாப்பிடுகிறார். அதுவும் உப்பு சப்பு இல்லாம தான் சாப்பிடுகிறார்.
TTF Vasan
கடைசியா என் தலைவன் டிடிஎப் வாசன் உள்ள வந்ததும் ஜெயிலே கதறுது. குருநாதா இங்கயுமாங்கிற மாதிரி கையில் கட்டோட உள்ள வந்தான். அங்க தனி செல்லில் தான் வச்சிருந்தாங்க. அவரு வழக்கம்போல அங்க உள்ள போலீசையும் வா செல்லம், போ செல்லம்னு சொல்லிட்டு இருக்காரு. ஒருநாள் அவர் பைக்கை எரிக்க சொல்லிட்டாங்கனு தீர்ப்பு வருது, உள்ளே இருக்கும் கைதிகள் எல்லாம் கோலாகலமா கொண்டாடுனாங்க” என சிறையில் நடந்த சம்பவங்கள் பற்றி ரவீந்தர் கூறினார்.
இதையும் படியுங்கள்... கருப்பு நிற ஆடையில் எக்கச்சக்க அழகு.. பின்னழகை காட்டி சொக்கவைக்கும் கீர்த்தி - ஹாட் அண்ட் கூல் போட்டோஸ்!