Rashmika: இப்படி ஒரு விஷயத்தை கற்பனை செய்து கூட செய்யமுடியவில்லை! வேதனையோடு ராஷ்மிகா போட்ட பதிவு!
நடிகை ராஷ்மிகாவின் உருவத்தை, வேறு ஒரு பெண்ணின் உடலோடு பொருத்தி... மார்பிங் செய்து வீடியோ வெளியானது குறித்து, ராஷ்மிகா வேதனையோடு போட்டுள்ள பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கன்னட திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான, நடிகை ராஷ்மிகாவுக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது தெலுங்கில் வெளியான 'கீதா கோவிந்தம்' திரைப்படம் தான். இப்படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியா ராஷ்மிகா, தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக வெளியான 'சுல்தான்' படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
தென்னிந்திய திரையுலகில், மிக குறுகிய காலத்தில் முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்த ராஷ்மிகா, பாலிவுட் திரையுலகிலும் தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். அமிதாப்பச்சனுடன் இவர் நடித்த ’குட்பை’ என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக, 'அனிமல்' என்கிற படத்தில் நடித்துள்ளார்.
மேலும் தேசிய விருது நடிகர்,அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் D51 படத்திலும் ராஷ்மிகா நடிக்க கமிட் ஆகியுள்ளார். பாலிவுட் திரையுலகில் முழு கவனமும் செலுத்தி வருவதால், தென்னிந்திய திரைப்படங்கள் நடிப்பதை ராஷ்மிகா குறைத்து கொண்டுள்ளதாகவும் சில தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
இந்நிலையில், ராஷ்மிகா கருப்பு நிற உடை அணிந்து, லிப்ட் உள்ளே இருந்து வெளியே வந்து பேசுவது போல் ஒரு டீப் ஃபேக் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது . இந்த வீடியோ வெளியான சில மணிநேரங்களிலே தீயாக பரவிய நிலையில், இதில் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என பல பிரபலங்கள் பொய்யான வீடியோ என பதிவிட்டதோடு, உண்மையான வீடியோவையும் வெளியிட்டனர்.
மேலும், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களுடைய எதிர்ப்பையும் தெரிவித்து வந்தனர். இதை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா, மிகவும் வேதனையோடு இந்த வீடியோ குறித்து தன்னுடைய பதிவை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, சமூக வலைத்தளத்தில் வைரலாகி கொண்டிருக்கும் டீப் பேக் வீடியோ குறித்து, பேசுவது வேதனையாக உள்ளது. தொழில் நுட்பத்தை இப்படி தவறான செயல்களுக்கு பலர் பயன்படுத்துவதை பார்த்தால் பயமாக இருக்கிறது. இப்படி பட்ட சம்பவம், என் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் நடந்திருந்தால் எப்படி சமாளித்திருக்பேன் என்பதை நினைத்து கூட பார்க்கமுடியவிலை. என கூறியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D