பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 53ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கே பேட்ஸ்மேன் அஜிங்க்யா ரஹானே 9 ரன்களில் ஆட்டமிழந்ததோடு 11 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 208 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற 53ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி சிஎஸ்கே அணியில் அஜிங்க்யா ரஹானே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், 2ஆவது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ரஹானே கடைசி பந்தில் 9 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

இந்த சீசனில் ரஹானே 27, 12, 45, 35, 5, 36, 1, 9, 29 என்று மொத்தமாக 199 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தற்போது இந்தப் போட்டியில் 9 ரன்கள் எடுத்து விளையாடிய 11 போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 208 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஒரு முறை கூட அரைசதம் அடிக்கவில்லை. இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் மோசமான ஃபார்மை வெளிப்படுத்திய வீரராக ரஹானே திகழந்துள்ளார்.

அப்படியிருக்கும் போது ஏன், தொடர்ந்து அவருக்கு சிஎஸ்கே நிர்வாகம் வாய்ப்பு கொடுக்கிறது என்று தெரியவில்லை. கொல்கத்தா அணியில் ரூ.1 கோடிக்கு விளையாடிக் கொண்டிருந்த அஜிங்க்யா ரஹானே மீது தோனி நம்பிக்கை வைத்து கடந்த சீசனில் ரூ.50 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். அந்த சீசனில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் இந்த சீச்சனில் சொதப்பி வருகிறார்.

ஒவ்வொரு போட்டியிலும் வாய்ப்பு கொடுக்கும் போதும், அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்து வருகிறார். இதுவரையில் இந்த சீசனில் ரஹானே விளையாடிய 11 போட்டிகளில் மொத்தமாக 208 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த நிலையில், ரஹானே அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது வெறுப்படைந்த சிஎஸ்கே ரசிகர்கள் அவருக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ள்னர். இனி வரும் போட்டிகளில் ரஹானேவிற்கு வாய்ப்பு கிடைக்குமோ? கிடைக்காதோ? ஆனால், அடுத்த சீசனில் ரஹானே விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…