Ramya Pandian: நவராத்திரி ஸ்பெஷல்.. தாமரை மேல் அமர்ந்திருக்கும் துர்கா தேவியாக காட்சியளிக்கும் ரம்யா பாண்டியன்
நவராத்திரியை முன்னிட்டு நடிகை ரம்யா பாண்டியன் துர்கா தேவி மேக் ஓவரில் எடுத்து கொண்ட த்ரோ பேக் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
Ramya Pandian
இன்ஸ்டாகிராமில், 2.7 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸை வைத்திருக்கும் ரம்யா பாண்டியன் அடிக்கடி விதவிதமான உடைகளில் போட்டோ ஷூட் செய்து அதனை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
Ramya Pandian Photo Shoot
சமீபத்தில் கூட பிங்க் நிற கோட் சூட் மற்றும் சிவப்பு நிற லெஹங்காவில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டது. மேலும் குடும்பத்துடன் எங்கு சென்றாலும்... அங்கு எடுத்து கொள்ளும் புகைப்படங்களையும் ரம்யா பாண்டியன் வெளியிட்டு வருகிறார் என்பது நாம் அறிந்தது.
Ramya Pandian Durga Devi Avatar
இந்நிலையில் இவர், நவராத்திரி ஸ்பெஷலாக துர்கா தேவியாக மாறி எடுத்த த்ரோ பேக் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Marmorizing photos :
கோவில் சிலை போல் காட்சியளிக்கும் ரம்யா, பூக்களை வைத்து கொண்டும், தீபத்தை ஏந்தியபடியும் போஸ் கொடுத்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Ramya Pandian Sitting on Lotus
அதே போல் துர்கா தேவி, தாமரை மீது அமர்ந்திருப்பது போல் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தான் செம்ம ஹை லைட். இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது மட்டும் இன்றி, நவராத்திரியை முன்னிட்டு பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.
Navaratri special post:
இந்த பதிவில், ’நவராத்திரி என்பது ஒவ்வொரு பெண்ணும் துர்கா தேவியின் ஆத்ம சக்தியை தன்னுள் சுமந்து இருப்பதை நினைவூட்டுகிறது. கடுமையான, நெகிழ்ச்சியான, சக்தி வாய்ந்த தேவியின் முக்கியத்துவத்தை இந்த நாளில் கொண்டாடுவோம். ஒவ்வொரு பெண்ணின் வலிமையையும் போற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.