MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பிக்பாஸில் ஒரே நேரத்தில் 5 வைல்டு கார்டு எண்ட்ரி... அதிகாரப்பூர்வமாக அறிவித்த கமல் - யார்... யார் தெரியுமா?

பிக்பாஸில் ஒரே நேரத்தில் 5 வைல்டு கார்டு எண்ட்ரி... அதிகாரப்பூர்வமாக அறிவித்த கமல் - யார்... யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரே நேரத்தில் 5 பேர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 23 2023, 12:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Kamalhaasan

Kamalhaasan

பரபரப்புக்கு விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்சியான பிக்பாஸ் இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதில் முதல் இரண்டு சீசன்களில் ஆரவ் மற்றும் ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து மூன்றாவது மற்றும் நான்காவது சீசனில் முகென் ராவ் மற்றும் ஆரி தேர்வாகினர். கடைசியாக நடந்து முடிந்த 5 மற்றும் 6-வது சீசனில் ராஜு மற்றும் அசீம் டைட்டில் வின்னர்கள் ஆகினர்.

25
Bigg Boss Tamil season 7 contestants

Bigg Boss Tamil season 7 contestants

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரவாரத்தோடு கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில் நிக்சன், பிரதீப், மணி, விஷ்ணு, விஜய் வர்மா, பவா செல்லதுரை, விக்ரம், யுகேந்திரன், கூல் சுரேஷ் ஆகிய 9 ஆண்டு போட்டியாளர்களும், அனன்யா ராவ், விசித்ரா, ஜோவிகா, பூர்ணிமா, மாயா, ரவீனா, ஐஷூ, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 9 பெண் போட்டியாளர்களும் கலந்துகொண்டனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

35
Bigg Boss Kamal

Bigg Boss Kamal

இதில் இதுவரை முடிந்துள்ள மூன்று வாரத்தில் அனன்யா ராவ் மற்றும் விஜய் வர்மா ஆகியோர் எலிமினேட் ஆகி வெளியேறி உள்ளனர். இரண்டாவது வாரத்தில் பவா செல்லதுரை உடல்நலக்குறைவு காரணமாக பாதியிலேயே வெளியேறினார். இதனால் தற்போது 15 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர். இதன்காரணமாக இந்த வாரம் வைல்டு கார்டு எண்ட்ரி இருக்கும் என நாம் முன்னரே செய்தி வெளியிட்டு இருந்தோம். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

45
Bigg Boss wild card entry

Bigg Boss wild card entry

வழக்கமாக வைல்டு கார்டு போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பப்படுவார்கள். ஆனால் பிக்பாஸ் 7-வது சீசன் பல்வேறு புதுமைகளை கொண்டது என்பதால், வைல்டு கார்டு எண்ட்ரியிலும் ஒரு அதிரடி மாற்றம் செய்துள்ளனர். அது என்னவென்றால் ஒரே நேரத்தில் 5 போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக அனுப்ப உள்ளார்களாம். இதனை கமல்ஹாசனே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

55
Archana, gana bala

Archana, gana bala

அந்த 5 போட்டியாளர்களும் வருகிற அக்டோபர் 28-ந் தேதி இரவு 8 மணிக்கு பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கானா பாலா மற்றும் சீரியல் நடிகை அர்ச்சனா ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்கு வைல்டு கார்டு போட்டியாளராக செல்ல உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், எஞ்சியுள்ள 3 போட்டியாளர்கள் யார் என்பது தான் தற்போது புரியாத புதிராக இருக்கிறது.

இதையும் படியுங்கள்... இத்தாலியில் சொகுசு வீடு... ரூ.150 கோடி சம்பளம் என காஸ்ட்லி ஹீரோவாக வலம் வரும் பிரபாஸின் சொத்து மதிப்பு

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved