Asianet News TamilAsianet News Tamil

E PASS : ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ்.! சுற்றுலா பயணிகள், வணிகர்கள் பாதிப்பு.? பரிசீலனை தேவை- ஜவாஹிருல்லா

 உதகை மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் இபாஸ் பெற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். 

Jawahirullah requests to review the e pass scheme for Ooty and Kodaikanal KAK
Author
First Published Apr 30, 2024, 10:27 AM IST

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ பாஸ்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் குளுமையான இடங்களை தேடி செல்லும் நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் ஊட்டி, கொடைக்காணலுக்கு அதிகளவிலான மக்கள் வருவதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு வன விலங்குகளும் பாதிக்கப்படுகிறது.

ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு ஒரே நாளில் 1,300 வேன்கள் உள்பட 20,000 வாகனங்கள் வருகை தருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து  கொரோனா கால கட்டத்தில் பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறையை உதகை மற்றும் கொடைக்கானலில் மே 7-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மக்களே உஷார்... இந்த 3 நாட்களுக்கு வெப்ப அலை உக்கிரமாக இருக்குமாம்.. தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை!

Jawahirullah requests to review the e pass scheme for Ooty and Kodaikanal KAK

 இ பாஸ் - மறுபரிசீலனை தேவை

இந்தநிலையில் உயர்நீதி மன்ற உத்தரவு சுற்றுலா பயணிகளை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. முன்கூட்டியே வாகனம் மற்றும் ரூம்கள் புக்கிங் செய்தவர்களுக்கு இ பாஸ் கிடைக்கவில்லையென்றால் பாதிப்படையும் நிலை உருவாகியுள்ளது. இதே போல சீசன் நேரத்தில் வரும் சுற்றுலா பயணிகளை நம்பியே வணிகர்களு மற்றும் உள்ளூர்வாசிகள் உள்ளனர். எனவே இதனஐ பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள தகவலில், உதகை மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் இபாஸ் பெற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் எனவலியுறுத்தியுள்ளார்.

இ பாஸ் நடைமுறை பல பிரச்னைகளை உண்டாக்கும் என தெரிவித்துள்ளவர்,  சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தால், அதனை நம்பி இருக்கும் உள்ளூர் மக்கள் பொருளாதார இழப்புகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.  எனவே இ பாஸ் நடைமுறையை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட வேண்டும் என ஜவாஹிருல்லா கேட்டுக்கொண்டு்ளார். 

ஊட்டி, கொடைக்கானலுக்கான செல்ல இ-பாஸ் பெற வழிகாட்டு நெறிமுறை என்ன.? தமிழகம் அரசு எப்போது வெளியிடுகிறது.?

Follow Us:
Download App:
  • android
  • ios