ஊட்டி, கொடைக்கானலுக்கான செல்ல இ-பாஸ் பெற வழிகாட்டு நெறிமுறை என்ன.? தமிழகம் அரசு எப்போது வெளியிடுகிறது.?
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் தொடர்பான வழிகாட்டு நெறிமுறை ஓரிரு நாளில் வெளியிடப்படுகிறது. சுற்றுலா, வனத்துறை, காவல்துறை, போக்குவரத்து மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை ஒருங்கிணைந்து இ பாஸ் நடைமுறைகளை ஆலோசித்து வருகின்றனர்
கூட்ட நெரிசலில் ஊட்டி
வெயிலின் தாக்கம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாலும், பள்ளிகளுக்கு விடுமறை அளிக்கப்பட்டுள்ளதாலும் பொதுமக்கள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களை நோக்கி செல்லத்தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல், உணவு, தண்ணீர் தட்டுப்பாடு போன்றவை ஏற்படுகிறது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்படையும் நிலையும் உருவானது. இந்தநிலையில், உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tamilnadu Rain Alert: அடுத்த 3 மணிநேரத்தில் எந்ததெந்த மாவட்டத்தில் மழை பெய்யப்போகுது தெரியுமா?
ஊட்டி, கொடைக்கானல் -ஐஐடி ஆய்வு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்தனர். அப்போது உதகைக்கு தினமும் 1,300 வேன்கள் உள்பட 20,000 வாகனங்கள் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இத்தனை வாகனங்கள் சென்றால் நிலைமை மோசமாகும். உள்ளூர் மக்கள் நடமாட இயலாது. சுற்றுச்சூழலும், வன விலங்குகளும் பாதிக்கப்படும்.
இ பாஸ் பெற நடைமுறை என்ன.?
எனவே கொரோனா கால கட்டத்தில் பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறையை உதகை மற்றும் கொடைக்கானலில் மே 7-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டனர்.
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் தொடர்பான வழிகாட்டு நெறிமுறை ஓரிரு நாளில் வெளியிடப்படுகிறது. சுற்றுலா, வனத்துறை, காவல்துறை, போக்குவரத்து மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை ஒருங்கிணைந்து இ பாஸ் நடைமுறைகளை ஆலோசித்து வருகின்றனர். இந்த இ பாஸ் முறையில் எத்தனை பேர் செல்கிறீர்கள், எந்த இடத்தில் தங்குகிறீர்கள், எந்த வகையான வாகனம், வாகனத்தில் எண் மற்றும் எத்தனை நாட்கள் தங்குகிறீர்கள் என கேள்வி கேட்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலர்.. கண்களை தானம் செய்து பார்வையற்றவர்களுக்கு உதவிய உறவினர்கள்