MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இத்தாலியில் சொகுசு வீடு... ரூ.150 கோடி சம்பளம் என காஸ்ட்லி ஹீரோவாக வலம் வரும் பிரபாஸின் சொத்து மதிப்பு

இத்தாலியில் சொகுசு வீடு... ரூ.150 கோடி சம்பளம் என காஸ்ட்லி ஹீரோவாக வலம் வரும் பிரபாஸின் சொத்து மதிப்பு

நடிகர் பிரபாஸ் இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 23 2023, 11:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Prabhas

Prabhas

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக படங்களில் நடித்து வந்தாலும், பிரபாஸுக்கு திருப்புமுனை கொடுத்த படம் என்றால் அது பாகுபலி தான். ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் பிரபாஸை பான் இந்தியா நடிகராக உயர்த்தியது. அதன்பின்னர் 2017-ம் ஆண்டு அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்த போது உலகளவில் பேமஸ் ஆகிவிட்டார் பிரபாஸ்.

26
Prabhas birthday

Prabhas birthday

பாகுபலி படத்துக்கு பின்னர் அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகின்றன. பாகுபலிக்கு பின் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சாஹோ, ராதே ஷியாம், ஆதிபுருஷ் ஆகிய மூன்று பிரம்மாண்ட படங்களும் படுதோல்வி அடைந்தது. இதனால் சலார் படம் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார் பிரபாஸ். கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய சலார் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 22-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

36
Baahubali Prabhas

Baahubali Prabhas

இதுதவிர கல்கி என்கிற படத்திலும் நடித்து வருகிறார் பிரபாஸ். இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இதில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் பிரபாஸ் இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ள நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

46
Prabhas net worth

Prabhas net worth

நடிகர் பிரபாஸ் தொடர்ந்து 3 படங்கள் பிளாப் கொடுத்தாலும் அவரின் மார்க்கெட் படத்துக்கு படம் ஜெட் வேகத்தில் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் அவருக்கு சம்பளமும் வாரி வழங்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது ஒரு படத்துக்காக ரூ.150 கோடி சம்பளமாக வாங்குகிறாராம். இதுதவிர இந்த ஆண்டு நிலவரப்படி நடிகர் பிரபாஸுக்கு ரூ.240 கோடி சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் பிரபாஸுக்கு சொந்தமாக சொகுசு வீடுகளும் ஏராளமாக உள்ளன.

56
Prabhas salary

Prabhas salary

குறிப்பாக ஐதராபாத்தில் உள்ள ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் பிரபாஸுக்கு சொந்தமாக 84 ஏக்கர் பரப்பளவில் ஒரு சொகுசு பங்களா உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு ரூ.60 கோடி இருக்குமாம். இந்த வீட்டிலேயே நீச்சல் குளம், ஜிம் வசதி உள்பட எக்கச்சக்கமான வசதிகள் உள்ளதாம். குறிப்பாக தன் வீட்டில் உள்ள ஜிம்மிற்காக வெளிநாட்டில் இருந்து ரூ.1.5 கோடிக்கு பொருட்களை வாங்கி வைத்துள்ளாராம் பிரபாஸ். இதுதவிர மும்பையில் ஒரு ஆடம்பர பங்களா வைத்துள்ள பிரபாஸ், அண்மையில் இத்தாலி நாட்டில் ஒரு பிரம்மாண்ட வீட்டை வாங்கி இருக்கிறார். அந்த வீட்டை தற்போது வாடகைக்கு விட்டுள்ளார். அதன் வாடகை மட்டும் ஒரு மாதத்திற்கு ரூ.40 லட்சமாம்.  

66
Prabhas car collection

Prabhas car collection

பிரபாஸ் கார்கள் மீதும் அலாதி பிரியம் கொண்டவர். இதனால் பல சொகுசு கார்களை வாங்கி குவித்துள்ளார். இவரிடம் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்ஸ் கார், ஆடி ஏ6, பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், ஜாகுவார் XJL, ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம், லம்போகினி போன்ற சொகுசு கார்கள் உள்ளன. நடிகர் பிரபாஸுக்கு விளம்பரங்களில் நடிக்க அதிகளவிலான வாய்ப்பு வந்தாலும், அவர் குறிப்பிட்ட சில விளம்பரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். குறிப்பாக 2020ம் ஆண்டு மட்டும் ரூ.150 கோடி சம்பளத்துடன் வந்த விளம்பரங்களில் நடிக்க மறுத்துள்ளார் பிரபாஸ்.

இதையும் படியுங்கள்... அன்று பிழைப்புக்காக கழிவறையை சுத்தம் செய்த பிரபல நடிகை.. ஆனா இன்று அவரின் சொத்து மதிப்பு ரூ.58 கோடி..!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரபாஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved