MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Karthika Nair Engagement Photos: மகள் கார்த்திகாவின் நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராதா!

Karthika Nair Engagement Photos: மகள் கார்த்திகாவின் நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராதா!

நடிகை ராதா தன்னுடைய  மகள் கார்த்திகாவின் நிச்சயதார்த்த புகைப்படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 23 2023, 12:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில் 80-களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சிவாஜி கணேசன் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ராதா. இவரை திரையுலகில் ஹீரோயினாக அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் பாரதி ராஜாவை தான் சேரும். நடிகர் முத்து ராமனின் மகனும், நவரச நாயகனுமான கார்த்தியும் - ராதா இருவரையும் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகப்படுத்தினார்.
 

25

இப்படத்தின் வெற்றி இருவரையுமே முன்னணி நடிகர் - நடிகைகளாக மாற்றியது. குறிப்பாக ராதா தமிழை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பல படங்களில் நடித்தார். பின்னர் முன்னணி நடிகையாக இருக்கும் போதே... பிரபல தொழிலதிபர், ராஜசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

பிக்பாஸில் ஒரே நேரத்தில் 5 வைல்டு கார்டு எண்ட்ரி... அதிகாரப்பூர்வமாக அறிவித்த கமல் - யார்... யார் தெரியுமா?
 

35

திருமணத்திற்கு பின்னர் 2 மகள் மற்றும் ஒரு மகனுக்கு தாயான ராதா, பல வருடங்கள் கழித்து சின்னத்திரையில் சில டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். மேலும் இவரின் மகள் கார்த்திகா 'கோ' படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான நிலையில், 3 தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார். அதே போல் சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்த இவர்... பின்னர் திரையுலகில் இருந்து விலகி தன்னுடைய தந்தையில் ஹோட்டல் பிஸினஸில் கவனம் செலுத்தினார்.
 

45

இவரை போலவே இவரின் தங்கையும் தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டுமே நடித்துவிட்டு திரையுலகில் இருந்து விலகினார். இந்நிலையில் கார்த்திகா கடந்த சில வருடங்களாக தன்னுடைய நண்பர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. ஏற்கனவே கார்த்திகை இந்த தகவலை புகைப்படம் வெளியிட்டு அறிவித்த நிலையில், தற்போது ராதா தன்னுடைய மகளின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இத்தாலியில் சொகுசு வீடு... ரூ.150 கோடி சம்பளம் என காஸ்ட்லி ஹீரோவாக வலம் வரும் பிரபாஸின் சொத்து மதிப்பு

 

55

இந்த பதிவில் கூறியுள்ளதாவது, "விரைவில் ஒரு புதிய குடும்பத்திற்கு எங்கள் பெண்ணைப் கொடுப்பது பற்றி பெருமைப்பட முடியாது. ஆனால் அவர்களின் மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். உனக்கு இந்த அழகான குடும்பத்தைத் தேர்ந்தெடுத்ததற்காக என்னை அதிர்ஷ்டசாலி என்று நான் சொல்ல முடியாது. ஆனால் திருமணம் என்பது இரண்டு குடும்பங்கள் ஒன்று சேர்வதைப் பற்றியது என்று நான் நம்புகிறேன். என் இதயம் இப்போது பல கலவையான உணர்வுகளுடன் இயங்குகிறது. ஆனால் அதிக அதிர்வு உங்கள் அன்பும் மகிழ்ச்சியும் மட்டுமே. எந்த தாயும் விரும்பும் ஒரு சிறந்த மகள் கர்து. நீ எங்கள் குடும்பத்திற்கு சிறந்த பரிசாக இருந்திருக்கிறாய். நீ எனக்கு அளித்த இந்த அற்புதமான அனுபவத்திற்கு நன்றி அன்பே என தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved