ஆஹா இந்த நடிகையா... இவங்க சண்டைக்கோழியாச்சே! சீரியல் வில்லியின் வருகையால் குஷியில் பிக்பாஸ் டீம்!
சீரியலில் வில்லியாக நடித்த நடிகையை பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக களமிறக்க பிக்பாஸ் குழு திட்டமிட்டு உள்ளதாம்.
BiggBoss Tamil
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அன்லிமிடெட் எண்டர்டெயின்மெண்ட் தான். இந்தியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் இந்நிகழ்ச்சியின் முதல் சீசனே வேறலெவல் ஹிட் ஆனது. இதையடுத்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ளன.
BiggBoss Tamil season 7
வருகிற அக்டோபர் 1-ந் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடங்க உள்ளது. வழக்கம்போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இன்னும் ஒருவாரமே உள்ளதால், யாரெல்லாம் போட்டியாளர்களாக களமிறங்க உள்ளார்கள் என்கிற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிய வண்ணம் உள்ளது. சைடு கேப்பில் போட்டியாளர்கள் குறித்த தகவல்களும் தொடர்ந்து கசிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் பாணியில்... அடுத்த பட ஹீரோவை டிக் செய்த அட்லீ! படம் குறித்து நடந்த பேச்சுவார்த்தை!
raja rani 2 archana
அந்த வகையில் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த், கவர்ச்சி நடிகை தர்ஷா குப்தா, நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா, நடிகர் பப்லு பிரித்விராஜ், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரன், குக் வித் கோமாளி பிரபலம் ரவீனா ஆகியோர் பங்கேற்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான மலர் சீரியலில் நடித்த நடிகை நிவிஷாவும் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளதாக கூறப்பட்டது.
serial actress Archana
இந்நிலையில், தற்போது மேலும் ஒரு சீரியல் நடிகை குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமான நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரனும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளாராம். இதைக்கேள்விப்பட்ட ரசிகர்கள் சீரியலிலேயே சண்டைக்கோழியாக வலம் வந்த இவர், பிக்பாஸ் வீட்டில் என்னென்ன செய்யப்போகிறாரோ என தற்போதே யூகிக்க தொடங்கிவிட்டனர்.
இதையும் படியுங்கள்... கதைகேட்டு கழட்டிவிட்ட விஜய்.. 4 வருட போராட்டத்துக்கு பின் ஒருவழியாக அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட AR முருகதாஸ்