கதைகேட்டு கழட்டிவிட்ட விஜய்.. 4 வருட போராட்டத்துக்கு பின் ஒருவழியாக அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட AR முருகதாஸ்
தமிழ் திரையுலகில் பல்வேறு மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருதாஸ் 4 ஆண்டுகளுக்கு பின் தன் அடுத்தபட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Ar murugadoss
அஜித்தின் தீனா படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் படத்திலேயே நடிகர் அஜித்தை வைத்து மாஸ் ஹிட் கொடுத்த இவர், அடுத்ததாக ரமணா படம் மூலம் கேப்டன் விஜயகாந்துடன் கூட்டணி அமைத்தார். இப்படத்தில் சமூகத்தில் நடக்கும் ஊழல்களை வெளிச்சம்போட்டு காட்டி இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ரமணா படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் கஜினி படம் மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார் முருகதாஸ்.
Ar murugadoss next movie
தமிழில் சக்கைப்போடு போட்ட கஜினி படத்தை பின்னர் இந்தியில் ஆமிர்கானை வைத்து ரீமேக் செய்து அங்கும் வெற்றிவாகை சூடினார். இதையடுத்து ஏழாம் அறிவு திரைப்படம் ஏ.ஆர்.முருகதாஸுக்கு சற்று சறுக்கலை தந்தாலும், பின்னர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என வரிசையாக ஹாட்ரிக் ஹிட் கொடுத்து கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் இயக்கத்தில் கடைசியாக ரஜினியின் தர்பார் திரைப்படம் திரைக்கு வந்தது.
இதையும் படியுங்கள்... நரிக்குறவர் குடும்பங்களுக்கு 6 வீடு... ரியல் கர்ணனாக மாறி இசையமைப்பாளர் டி.இமான் செய்த உதவி- குவியும் பாராட்டு
Ar murugadoss sivakarthikeyan
தர்பார் படம் பெரியளவில் கைகொடுக்காததால், மீண்டும் தன்னுடைய பேவரைட் நடிகரான விஜய்யுடன் கூட்டணி அமைத்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. அது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை ஏ.ஆர்.முருகதாஸ் மேற்கொண்டு வந்த நிலையில், கதையில் திருப்தி இல்லை எனக்கூறி அப்படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸை அதிரடியாக நீக்கிய விஜய் அவருக்கு பதிலாக நெல்சனுக்கு அந்த வாய்ப்பை வழங்கினார்.
Ar murugadoss birthday celebration
ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு பதிலாக நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த படம் தான் பீஸ்ட். விஜய் படத்தில் இருந்து பாதியில் கழட்டிவிடப்பட்ட ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த 4 ஆண்டுகளாக தனது அடுத்த படம் குறித்து எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் மவுனம் காத்து வந்தார்.
Ar murugadoss next movie SK 23
இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஏ.ஆர்.முருகதாஸ், பிறந்தநாள் ஸ்பெஷலாக தன்னுடைய அடுத்த பட அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதன்படி சிவகார்த்திகேயனின் எஸ்.கே.23 படத்தை தான் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக இயக்க உள்ளாராம். ஏ.ஆர்.முருகதாஸுக்கு பிறந்தநாள் கேக் வெட்டி, அடுத்த படத்தில் இணைவதையும் போட்டோ வெளியிட்டு உறுதி செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இதையும் படியுங்கள்... அல்ட்ரா மாடர்ன் உடையில்.. படுக்கையறை முதல்.. பாத் டப் வரை! கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!