- Home
- Gallery
- குக் வித் கோமாளிக்கு போட்டியாக டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் களமிறங்கும் நட்சத்திரங்களின் லிஸ்ட் இதோ
குக் வித் கோமாளிக்கு போட்டியாக டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் களமிறங்கும் நட்சத்திரங்களின் லிஸ்ட் இதோ
விஜய் டிவிக்கு போட்டியாக சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியில் மிகவும் பேமஸ் ஆன ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி இதுவரை வெற்றிகரமாக நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது அந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் பல்வேறு புதுமைகள் உடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதன்படி அந்நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன்களாக நடுவராக பணியாற்றி வந்த வெங்கடேஷ் பட் இம்முறை விலகி இருக்கிறார். அவருக்கு பதில் புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் பணியாற்றி வருகிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தூணாக இருந்த வெங்கடேஷ் பட் அந்நிகழ்ச்சியில் இருந்து விலகியதால் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஐந்தாவது சீசன் நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் அந்நிகழ்ச்சியின் டிஆர்பியும் கம்மியாகி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... Mothers Day : அச்சு அசல் அருண் விஜய் போல இருக்கும்.. அன்பு மகனுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய அனிதா விஜயகுமார்
மறுபுறம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய வெங்கடேஷ் பட் அதற்கு போட்டியாக சன் டிவியில் தொடங்கப்பட்டுள்ள டாப் குக்கு டூப் குக்கு என்கிற நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கி உள்ளார். அதுமட்டும் இன்றி விஜய் டிவியில் இருந்த ஜிபி முத்து, மோனிஷா, பரத், தீபா போன்ற கோமாளிகளும் சன் டிவிக்கு தாவி உள்ளனர்.
டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி இயக்குனரும் நடிகருமான சிங்கம் புலி, நடிகைகள் சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, சிவாங்கியின் தாயார் பின்னி, கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி, வில்லன் நடிகர் தீனா ஆகியோர் போட்டியாளர்களாக களமிறங்க உள்ளதாக அறிவித்து உள்ளனர். இந்நிகழ்ச்சி வருகிற மே 19-ந் தேதி முதல் ஞாயிறு தோறும் பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... வசூலில் சூப்பர்ஸ்டார் படத்தை ஓவர்டேக் செய்த கவினின் ஸ்டார் திரைப்படம் - இரண்டே நாளில் இத்தனை கோடி கலெக்ஷனா?