- Home
- Gallery
- தூத்துக்குடியில் பயங்கரம்.. சினிமா பாணியில் வழக்கறிஞர் ஓட ஒட விரட்டி படுகொலை.. இதுதான் காரணமா?
தூத்துக்குடியில் பயங்கரம்.. சினிமா பாணியில் வழக்கறிஞர் ஓட ஒட விரட்டி படுகொலை.. இதுதான் காரணமா?
தூத்துக்குடி வழக்கறிஞரும் தொழிலதிபரான செந்தில் ஆறுமுகம் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Property dispute
தூத்துக்குடி அண்ணா நகர் 4வது தெருவை சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம். வழக்கறிஞர் மற்றும் தொழிலதிபரான இவர் அந்தப் பகுதியில் மெடிக்கல் மற்றும் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது தங்கை கணவரான கோவில்பட்டியில் வசித்து வரும் கோபி நாதன் என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
Thoothukudi Lawyer Murder
இந்நிலையில் செந்தில்குமார் நேற்றிரவு இரவு மெடிக்கல் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை மூடிவிட்டு அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த செந்தில் ஆறுமுகம் அவர்களிடம் தப்பிக்க முயற்சித்துள்ளார். ஆனால், அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது.
இதையும் படிங்க: 45 வயதான மாமியார் சித்ரா மீது மருமகனுக்கு இவ்வளவு வெறியா? நடந்தது என்ன? பரபரப்பு தகவல்..!
Police investigation
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செந்தில் ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் சொத்து தகராறுக்காக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் தொழில் பிரச்னை காரணமாக நடைபெற்றதா என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் 2 வாலிபருடன் உல்லாசமாக இருந்த பெண் டாக்டர்! உள்ளே புகுந்த கணவர்! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?