ரெட் கார்டு கொடுத்து விசாரிக்காமல் வெளியேற்றிய கமல்! ஹேஷ் டேக்குடன் வாழ்த்து கூறி ஆண்டவரையே அதிரவிட்ட பிரதீப்!
உலக நாயகன் கமல்ஹாசனால், ரெட் கார்டு கொடுத்து அனுப்பட்ட பிரதீப் ஆண்டனி கமல் மீது உள்ள மரியாதையை வெளிப்படுத்தி, தீர விசாரிப்பதே மெய் என்கிற ஹேஷ் டேக்குடன் பதிவிட்டு ஆண்டவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
Pradeep
கடந்த 5 வருடங்களுக்கு மேலாக, உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். எந்த ஒரு விஷயத்தையும், யாருக்கும் பாதகம் இல்லாமல்... நடுநிலையோடு தீர விசாரித்து முடிவெடுக்கும் கமல்ஹாசன், கடந்த வாரம் பெண்கள் பிரதீபுக்கு எதிராக வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து, துளியும் விசாரிக்காமல் முடிவு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே பிரதீப்புடன் விளையாடி வந்த, கூல் சுரேஷ், விசித்ரா ஆகியோர் பிரதீப் கெட்ட வார்த்தைகள் பேசுவான், ஆனால் எந்த பெண்ணிடமும் கண்ணியம் இல்லாமல் நடந்து கொண்டது கிடையாது என்பதை ஆணித்தனமாக அடித்து கூறினர். இதையே ஒரு காரணமாக வைத்து, மாயா ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை அளவுக்கு அதிகமாக வஞ்சித்து வருவதாக பார்க்கப்படுகிறது. இவர்கள் போடும் சண்டையால், அர்ச்சனாவுக்கு ஒரே வாரத்தில் எக்கச்சக்க ரசிகர்கள் கூடி, அவருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
BB Tamil 7
மேலும் கமல்ஹாசன் இந்த விஷயத்தை தீர விசாரிக்க வேண்டும் என்றும், பூர்ணிமா விஷயத்தில் குறும்படம் போடும் படி, பிக்பாஸ் ரசிகர்கள் வலியுறுத்து வருகிறார்கள். எனினும் தன்னுடைய தவறான முடிவை கமல் மீண்டும் பரிசீலனை செய்து, மாயா தன்னுடைய கேப்டன்சியை பயாஸ்ட்டாக பயன்படுத்துவதற்கு, அவருக்கு ஸ்ட்ரைக் கொடுப்பாரா என பலர் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
kamalhaasan
பொய்யான குற்றச்சாட்டுடன், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப்... வெளியே வந்ததும் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுப்பது போல், பெண்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். மக்கள் தொடர்ந்து தனக்கு கொடுத்து வரும் ஆதரவுக்கும் நன்றியும் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து, இன்று உலக நாயகன் கமல் ஹாசனின் 69-ஆவது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி பிரதீப் போட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பதிவில், பிரதீப் கூறியுள்ளதாவது, "சத்தியமாக சொல்கிறேன்... நான் உங்கள் பெரிய ரசிகன் கமல் சார். "உங்களுக்கு 69வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவுக்கு உங்கள் கலை மற்றும் பங்களிப்புகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. உங்களை அதிகம் நேசிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும் தீர விசாரிப்பதே மெய் என்கிற ஹேஷ்டேக் ஒன்றையும் பதிவிட்டு, கமல் நடித்துள்ள வசூல் ராஜா MBBS படத்தில் இடம்பெறும் காமெடி வீடியோவையும் வெளியிட்டுள்ளார்".
Bigg Boss Pradeep
இதை தொடர்ந்து பிக்பாஸ் ரசிகர்கள் பலர், பிரதீப் ஆண்டனி தன்னுடைய ட்வீட் மூலம் கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்துவிட்டதாக கூறி, அவரின் பதிவை தாறுமாறாக வைரலாக்கி வருகிறார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D