'இந்தியன் 2' படத்தில் இருந்து, இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படத்தை வெளியிட்டு, கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் இயக்குனர் ஷங்கர். 


உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தன்னுடைய 69, ஆவது பிறந்தநாளை மிகவும் பிரமாண்டமாக கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள், பிரபலங்கள், உள்ளிட்ட பலர் தொடர்ந்து ஆழ்வார் பேட்டை ஆண்டவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவர் நடித்து முடித்துள்ள 'இந்தியன் 2' படத்தின், இன்ட்ரோ வீடியோவை நவம்பர் 3 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

ரஜினி வெளியிட்டதற்காக கமல்ஹாசனும் தன்னுடைய நன்றிகளை கூறி இருந்தார். மேலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில், அமீர்கான், ராஜமௌலி, கிச்சா சுதீப் போன்ற பிரபலங்கள் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தனர். இதை தொடர்ந்து நேற்றைய தினம் கூட, கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தின், டைட்டில் 'தக் லைஃப்' என்று ஒரு இன்ட்ரோ வீடியோவுடன் அறிவித்தது படக்குழு.

Thug Life Copy Cat: அட கடவுளே மணிரத்னத்தின் 'தக் லைஃப்' படத்தின் இன்ட்ரோ வீடியோ இந்த படத்தின் அட்ட காப்பியா?

Scroll to load tweet…

தற்போது கமல்ஹாசனின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதத்தில், 'இந்தியன் 2' படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம், பிரத்தேயேக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, கமல் ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இதை தெடர்ந்து, 'இந்தியன் 2' படத்தின் இயக்குனர் ஷங்கர், இதுவரை யாரும் பார்த்திடாத 'இந்தியன் 2' ஷூட்டிங் ஸ்பாட்டில், வேஷ்டி சட்டையில் இருக்கும் இந்தியன் தாத்தாவின் புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Scroll to load tweet…

இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், "நமது உலகநாயகனுக்கு வாழ்த்துக்கள், கமல்ஹாசன் சார் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! சேனாபதியை மீண்டும் அழைத்து வர உங்களுடன் மீண்டும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் அருமை! நீங்கள் தொடர்ந்து எங்களை மகிழ்விப்பீர்கள், மேலும் மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிப்பீர்கள் என்று நம்புகிறேன்! என தெரிவித்துள்ளார்.