Thug Life Copy Cat: அட கடவுளே மணிரத்னத்தின் 'தக் லைஃப்' படத்தின் இன்ட்ரோ வீடியோ இந்த படத்தின் அட்ட காப்பியா?
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும், 'தக் லைஃப் திரைப்படத்தின் இன்ட்ரோ வீடியோ, ஹாலிவுட் படத்தின் அட்ட காப்பி என, ஆதாரத்தை வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
Kamalhaasan
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று உலக நாயகன் என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரராக உயர்ந்துள்ள பன்முக திறமையாளரான கமல்ஹாசன், இன்று தனது 69வது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு, கமல் - மணிரத்னம் கூட்டணியில் 'நாயகன்' படத்திற்கு பின்னர் இந்த இரு ஜாம்பவான்களும், சுமார் 36 வருடங்களுக்கு பின்னர் கை கோர்த்துள்ள, KH234 படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இந்த படத்திற்கு யாரும் எதிர்பாராத விதமாக 'தக் லைஃப்' என்று பெயரிட்டுள்ளதாக படக்குழு அறிவித்த நிலையில், இதுகுறித்த, இன்ட்ரோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டனர். இதில் கமல்ஹாசன் தன்னுடைய பெயர் 'ரங்கராய சக்திவேல் நாயகன்' என கூறி இருந்தார். மேலும் கத்தி, கோடாரி, தீ பந்தம், அருவா போன்ற ஆயுதங்களை கொண்டு தன்னை தாக்க வரும் 5 பேரை அடித்து தும்சம் செய்யும் கமல், தன்னை காளை தாக்க வருவது இது முதல் முறை அல்ல... கடைசி முறையும் அல்ல என்றும், இது ஒரு கேங் ஸ்டார் படம் என்பதையும் உறுதி செய்தார்.
இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது இப்படத்தின் இன்ட்ரோ வீடியோ, கடந்த 2019-ஆம் ஆண்டு, ஹாலிவுட் நடிகர் மார்க் ஹாமில், கேரி பிஷ்ஷர், டெய்சி ரிட்லி, ஜான் பொய்யிகா, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'Rise Of Skywalker' படத்தில் இடம்பெற்ற காட்சிகளில் அட்ட காப்பி என்று, ஆதாரத்தோடு வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.