MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கமலின் பெருமைமிகு அடையாளம்.. 41 வருட பொக்கிஷத்தை காட்சிப்படுத்த முடிவு செய்த 'ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்'!

கமலின் பெருமைமிகு அடையாளம்.. 41 வருட பொக்கிஷத்தை காட்சிப்படுத்த முடிவு செய்த 'ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்'!

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, கமல்ஹாசன் பயன்படுத்தி சுமார் 40 வருடங்கள் பழமை வாய்ந்த பொக்கிஷத்தை, காட்சிப்படுத்த முடிவு செய்த 'ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்'. 

2 Min read
Author : manimegalai a
Published : Nov 06 2023, 07:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ துவங்கியதில் இருந்து சினிமாவின் பாரம்பரியத்தை, சினிமா வரலாற்றை கொண்டாடும் அதனுடைய நேர்த்தியான பழமை வாய்ந்த சேகரிப்புகளாலும், அன்பே வா, பாயும் புலி, சகலகலா வல்லவன், எஜமான், சிவாஜி ; தி பாஸ், அயன், திருப்பதி மற்றும் பல படங்களில் இடம்பெற்ற அரிய வாகனங்களின் ஈர்க்கக்கூடிய தொகுப்புகளை கவனமாக பாதுகாக்கும் காப்பகமாகவும் ‘டாக் ஆப் தி டவுன்’ ஆக இருந்து வருகிறது.  

26

நாளை (நவ-7) தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசனின் அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாக, இந்த மியூசியம் அவரது பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்று பிரபலமான, 1980 மாடல் ராயல் என்பீல் புல்லட்டை காட்சிப்படுத்த இருக்கிறது.

Rashmika: இப்படி ஒரு விஷயத்தை கற்பனை செய்து கூட செய்யமுடியவில்லை! வேதனையோடு ராஷ்மிகா போட்ட பதிவு!

36

ஏவிஎம் புரடக்சன்ஸ் தயாரிப்பில் 1982 ஆகஸ்ட்-14ஆம் தேதி வெளியான ‘சகலகலா வல்லவன்’ திரைப்படம் நடிகர் கமல்ஹாசனின் ரசிகர் வட்டத்தை ‘கிளாஸ்’-லிருந்து ‘மாஸ் ஹீரோவுக்கு என்கிற அளவில் விரிவிவாக்கியதுடன் அவரது  நடனம் மற்றும் சண்டை காட்சிகளுக்காகவும் பாராட்டப்பட்டது.. பஞ்சு அருணாச்சலம் எழுதிய கதையில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்தப்படத்தில் அம்பிகா மற்றும் துளசி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.  

46

இசைஞானி இளையராஜாவால் உருவாக்கப்பட்ட பலரகப்பட்ட பாடல்களுக்காக இந்தப்படத்தின் இசை இன்றளவும் நினைத்து பார்க்கப்படுகிறது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ்சினிமாவில் அதிகம் வசூலித்த படமாகவும் மாறியது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

56

1989ல் ‘அபிமன்யு’ என்கிற பெயரில் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. ‘சகலகலா வல்லவன்’ என்கிற பட்டத்திற்கு ஏற்ப, உலக நாயகன் கமல்ஹாசன் சகல கலைகளிலும் வல்லவர் தான் என நிரூபிக்கும் விதமாக ஏவிஎம் புரடக்சன்ஸ் இந்தப்படத்தை உருவாக்கியது. 

66

அந்த ராயல் என்பீல்ட் புல்லட் இடம்பெற்ற “இளமை இதோ இதோ” என்கிற நடனப்பாடல் தமிழ் சினிமாவில் புத்தாண்டை கருப்பொருளாக கொண்டு உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக திகழ்வதுடன் ஒவ்வொரு புத்தாண்டிலும் வானொலி மற்று தொலைக்காட்சி சேனல்களில் தவறாமல் இசைக்கப்பட்டு வருகிறது. புல்லட்டை அதிக அளவில் பயன்படுத்தும் நடைமுறைக்கு கொண்டு வந்த படமாக இது அமைந்தது. அந்த புல்லட்டை தற்போது மியூசியத்தில் வைத்து கமல்ஹாசனை பெருமைப்படுத்தியுள்ளது ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்.

இந்த அறிவு கமலுக்கு இல்லாம போச்சே? ஆண்டவருக்கு எதிராகவும்.. பிரதீபுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த சினேகன்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved