லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 67ஆவது லீக் போட்டியின் போது அர்ஜூன் டெண்டுல்கர் மார்கஸ் ஸ்டோய்னிஸை வம்புக்கு இழுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 67ஆவது லீக் போட்டி தற்போது வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. கேஎல் ராகுல் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், தேவ்தத் படிக்கல் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டோய்னிஸ் களமிறங்கினார்.
ஹாட்ரிக் விக்கெட்டை பறிகொடுத்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் சாதனை!
இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. போட்டியின் 2ஆவது ஓவரை அவர் தான் வீசினார். இந்த ஓவரில், 2ஆவது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஸ்டோய்னிஸிற்கு அவுட் கொடுக்கப்பட்டது.
ஆனால், அவர் ரெவியூ எடுக்கவே, பந்து ஸ்டெம்பிற்கு மேல் சென்றது தெளிவாக தெரிந்தது. இதன் காரணமாக நடுவர் முடிவு திரும்ப பெறப்பட்டது. இந்த ஓவரின் கடைசி பந்தில் ரன் எடுக்காத போதிலும், அவர் கிரீஸிற்குள்ளாக நின்று கொண்டிருந்தார். அப்போது அர்ஜூன் டெண்டுல்கர் பந்தை பந்தை அவரை நோக்கி எறிவது போன்று ஆக்ஷன் செய்தார். இதற்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஏதோ கூறியபடி நடந்து வந்தார்.
ஐபிஎல் மெகா ஆக்ஷன் – கேகேஆர் அணிக்கு ஸ்கெட்ச் போடும் ரோகித் சர்மா?
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது ஒரு புறம் இருக்க, அர்ஜூன் டெண்டுல்கர் தனது 3ஆவது ஓவரை வீச வந்தார். அவர் ஓடி வரும் போதே காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பிஸியோ வந்து சென்ற பிறகு மீண்டும் பந்து வீசினார். அப்போது களத்தில் நின்றிருந்த நிக்கோலஸ் பூரன் சிக்ஸருக்கு விளாசினார். 2ஆவது பந்தையும் சிக்ஸருக்கு விளாசினார்.
அதன் பிறகு காயம் காரணமாக வெளியேறிவிட்டார். அந்த ஓவரில் பூரன் அடித்த 2 சிக்ஸர் மூலமாக 19 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் விளையாட வந்த அர்ஜூன் டெண்டுல்கர் 2.2 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 22 ரன்கள் கொடுத்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது.
