குழந்தைகளின் ஆர்வத்திற்கு எல்லையே இல்லை என்று ஏன் சொல்லுகிறார்கள் தெரியுமா..? காரணம், அவர்கள் கண்ணில் பார்த்ததை எல்லாம் வாயில் வைக்கும் பழக்கம் உண்டு. எனவே இந்த கட்டுரையில், உங்கள் குழந்தை எதையாவது விழுங்கினால் பீதி அடைய வேண்டாம். நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை குறித்து பார்க்கலாம்.

சின்ன குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்களின் முழு கவனமும் குழந்தைகள் மீது தான் இருக்கும். பொதுவாகவே குழந்தைகள் வளர வளர அவர்களின் ஆர்வத்திற்கு எல்லையே இல்லை. காரணம், அவர்கள் கண்ணில் பார்த்ததை எல்லாம் வாயில் வைக்கும் பழக்கம் உண்டு. பெரும்பாலும், இந்த பிரச்சனை 1-2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடம் தான் அதிகம் ஏற்படுகிறது. 

அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் சாப்பிடக்கூடிய எந்த ஒரு பொருளையும் சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்கள் கண்ணாடி நாணயங்கள், சட்டை பட்டன்கள், இரும்பு துண்டுகள், ரப்பர், பொம்மைகளிலிருந்து தளர்வான சக்கரங்கள் போன்றவற்றை ஆகும். இது அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.

இதில் சொல்லப்பட்டுள்ள ஏதாவது ஒன்றை குழந்தை தெரியாமல் விழுங்கினால், அது அவர்களின் தொண்டை வழியாகச் சென்று உணவுக்குழாய் மற்றும் மூச்சுக்குழாயை அடையும். மற்றும் அவற்றின் கூர்மையான விளிம்பு இந்த உறுப்புகளை காயப்படுத்தும். மேலும், துருப்பிடித்த இரும்பு பொருட்கள் தொற்றுநோயை ஏற்படுத்தும். உங்களுக்கு தெரியுமா.. இந்த பொருட்களை பிரித்தெடுப்பதில் எவ்வளவு காலம் தாமதமாகிறதோ, அவ்வளவு அதிக ஆபத்து குழந்தைக்கு உள்ளது.

இது தவிர, குழந்தை தனது வாயில் எதையாவது வைத்து, அது தொண்டையில் சிக்கினால், அதிகபட்சம் 2 மணி நேரத்திற்குள் மருத்துவ உதவியை பெற வேண்டும். இடையில், பெற்றோராகிய நீங்கள் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்பதை குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: Parenting Tips : உங்கள் பிள்ளையை Play Schoolக்கு அனுப்பும் முன் 'இதை' கண்டிப்பாக சொல்லிக் கொடுங்கள்!

குழந்தையின் தொண்டையில் ஏதாவது ஒரு பொருள் சிக்கியதற்கான அறிகுறிகள்:
மார்பில் வலி, உணவை விழுங்குவதில் சிரமம், இருமல், விக்கல், வாந்தி அல்லது சாப்பிட மறுப்பது. மேலும், சிக்கிய பொருளால் உள்ளுறுப்பில் காயம் ஏற்பட்டால் இருமலில் போது இரத்தம் வரும். வயிறு மற்றும் குடலில் சிக்கிக்கொண்டால் வயிற்று வலி, வாந்தி அல்லது மலத்தில் இரத்தம் வரும்.

செய்ய வேண்டியவை:
குழந்தையின் கைகளில் எந்த சிறிய பொருட்களும் கிடைக்காத படி எல்லாவற்றையும் உயரமாக வையுங்கள். குழந்தை, பொம்மையிலிருந்து எந்தப் பகுதியையும் எளிதில் பிரிக்காத படி கவனமாக இருங்கள். குறிப்பாக, அதில் இருக்கும் பட்டன் பேட்டரியை குழந்தை வாயில் போடும் அபாயம் உள்ளது. ஒருவேளை அதை வாயில் போட்டால் அது குழந்தையின் வயிற்றில் நுழைந்து, அவை இரைப்பைக் குழாயுடன் வினைபுரிந்து கடுமையான திசு சேதத்தை ஏற்படுத்தும். எனவே, அதை கூடிய விரைவில் வெளியே எடுத்தால் மட்டுமே குழந்தையின் உடல்நிலை தீவிரமடைவதைத் தடுக்க முடியும்.

இவற்றிற்குப் பின் உங்கள் குழந்தை இப்போது எந்த அறிகுறியும் இல்லாமல் நன்றாக இருப்பதாகத் தோன்றினாலும் கூட உடனே குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆபத்து இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  Parenting Tips : குழந்தைகள் ஏன் காட்டூன் பார்க்க கூடாது தெரியுமா..?

செய்யக்கூடாதவை:

  • உங்கள் குழந்தை ஏதாவது விழுங்கினால் அவற்றை வெளிய எடுப்பதற்காக, வயிற்றுப்போக்கை உண்டாக்கும் உணவு அல்லது மருந்துகளை குழந்தைக்கு ஒருபோதும் கொடுக்க வேண்டாம். இது பொருளை நகர்த்தாமல் போகலாம் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக குழந்தையின் ஆரோக்கியம் மோசமடையும்.
  • வலுக்கட்டாயமாக வாந்தியெடுக்க செய்ய வேண்டாம். இவ்வாறு செய்வது குழந்தையின் நிலையை இன்னும் மோசமாக்கலாம். 
  • குழந்தை ஏதாவது விழுங்கி விட்டால் அவர்களுக்கு வாய் வழியாக உணவையோ தண்ணீரையோ கொடுக்கக் கூடாது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D