MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Prabhas : கல்கி நாயகனுக்கு கல்யாணமா? 44 வயதாகும் நடிகர் பிரபாஸ் வாழ்க்கையில் நுழைந்த அந்த டார்லிங் யார்?

Prabhas : கல்கி நாயகனுக்கு கல்யாணமா? 44 வயதாகும் நடிகர் பிரபாஸ் வாழ்க்கையில் நுழைந்த அந்த டார்லிங் யார்?

பான் இந்தியா நாயகனாக வலம் வரும் நடிகர் பிரபாஸ், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சூசக பதிவால் அவருக்கு திருமணம் என பேச்சு அடிபட தொடங்கி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : May 17 2024, 12:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Prabhas

Prabhas

பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோவாக உருவெடுத்தவர் பிரபாஸ். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் அனுஷ்கா. அப்படத்தின் ஷூட்டிங்கின் போது பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் அவர்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதெல்லாம் வெறும் வதந்தி என கூறிய பிரபாஸ் தரப்பு, தாங்கள் இருவரும் நண்பர்கள் என்று விளக்கம் அளித்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Prabhas upcoming movies

Prabhas upcoming movies

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சாஹோ, ராதே ஷியாம், ஆதி புருஷ் ஆகிய மூன்று பிரம்மாண்ட படங்களும் படுதோல்வியை சந்தித்தது. ஹாட்ரிக் பிளாப் கொடுத்த பிரபாஸ், கடந்தாண்டு வெளிவந்த சலார் படம் மூலம் கம்பேக் கொடுத்தார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. சலார் படத்தின் வெற்றிக்கு பின்னர் அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் பணிகள் நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள்... PT Sir : 4 வருஷமா ஒரு படம் கூட வரல... இப்படி ஒரு வரவேற்பை சத்தியமா எதிர்பார்க்கல - ஹிப்ஹாப் ஆதி நெகிழ்ச்சி

34
Kalki 2898AD hero Prabhas

Kalki 2898AD hero Prabhas

தற்போது நடிகர் பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898AD, என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. அப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இப்படத்தில் பிரபாஸ் உடன் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற ஜூன் மாதம் 27-ந் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.

44
Prabhas insta story

Prabhas insta story

இந்த நிலையில், நடிகர் பிரபாஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள பதிவு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. அந்த பதிவில், டார்லிங்ஸ்... ஒருவழியாக மிகவும் ஸ்பெஷலான நபர் தன்னுடைய வாழ்க்கையில் வந்துவிட்டதாகவும், காத்திருங்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் திருமண அறிவிப்பை வெளியிட போகிறாரா அல்லது படம் குறித்த அறிவிப்பு வரப்போகிறதா என்பது தெரியாமல் குழம்பிப் போய் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... அன்று பாடகி இன்று சர்ச்சை ராணி... யார் இந்த ‘சுச்சி லீக்ஸ்' சுசித்ரா? அவரை சுற்றிய சர்ச்சைகள் ஒரு பார்வை

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரபாஸ்
பிரபாஸ் திருமணம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved