MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விவாகரத்துக்கு இது தான் காரணமா? பவன் கல்யாணினின் முன்னாள் மனைவி சொன்ன ஷாக் தகவல்..

விவாகரத்துக்கு இது தான் காரணமா? பவன் கல்யாணினின் முன்னாள் மனைவி சொன்ன ஷாக் தகவல்..

பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் விவாகரத்து குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசினார்.

2 Min read
Ramya s
Published : Jun 17 2024, 04:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாணுக்கும் நடிகை ரேணு தேசாய்க்கும் பத்ரி படத்தில் ஒன்றாக பணியாற்றிய காதல் மலர்ந்தது. பல ஆண்டுகளாக காதலித்து ஒன்றாக வாழ்ந்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணத்திற்கு முன் அகிரா நந்தன் என்ற மகன் இருந்தான். திருமணத்திற்குப் பிறகு ஆத்யா என்ற பெண் குழந்தை பிறந்தது. எனினும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இருவரும் பிரிந்தனர்.

27
Renu Desai

Renu Desai

இந்த நிலையில் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் விவாகரத்து குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசினார். பவன் கல்யானை பிரிந்ததால், அவரின் சில ரசிகர்கள் ரேணு தேசாய்யை தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.. இந்த விமர்சனங்களை ரேணு தேசாய் தொடர்ந்து புறக்கணித்து வந்தாலும், தற்போது பவன் கல்யாணின் ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

37

பவன் கல்யாண் ரசிகர் ஒருவர் ரேணு தேசாயின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் ஒன்றில் கருத்துத் தெரிவித்திருந்தார். அவரின் கமெண்டில் “இன்னும் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் அண்ணி. நீங்கள் ஒருவரை தவறாக புரிந்து கொண்டீர்கள். ஒருவேளை இப்போது நீங்கள் அவருடைய மதிப்பை உணர்ந்திருக்கலாம். ஆனால் குழந்தைகள் பவன் கல்யாணுடன் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ”என்று அந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.

47
photo credit prema interview

photo credit prema interview

அதற்கு பதிலளித்த ரேணு தேசாய். திருமணத்தை முறித்தது தான் அல்ல என்றும் தன்னை விட்டு பிரிந்தது பவன் தான் என்றும் அவர் தெரிவித்தார். “உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருந்தால், நீங்கள் இப்படி ஒரு முட்டாள்தனமான கருத்தைச் சொல்ல மாட்டீர்கள். அவர் என்னை விட்டு பிரிந்து மறுமணம் செய்து கொண்டார். தயவு செய்து இது போன்ற கருத்துகளை தவிர்க்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

57

பவன் கல்யாண் - ரேணு தேசாய்க்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அகிரா என்ற மகனும், ஆதியா என்ற மகளும் உள்ளனர். இதில் அகிரா பவனுடன் இருப்பதாகவும், ஆதியா ரேணு உடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரேணு தேசாயை பிரிந்த பின்னர், பவன் கல்யான் ரஷ்யாவை சேர்ந்த அன்னா லெஷ்னேவாவை மணந்துள்ளார்.

 

67

ஆனால், பவனுடன் பிரிந்த பிறகு மறுமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று ரேணு முடிவு செய்தார். இருப்பினும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த ஆண்டு, தனது நிச்சயதார்த்தம் குறித்து பேசிய ரேணு, “அந்த திருமணத்தை பற்றி நான் எதுவும் பேசவில்லை, அது முற்றிலும் என்னுடைய விஷயம். ஆனால், என் வாழ்க்கையில் நடந்ததை யாரும் தவறாகப் புரிந்து கொள்ள நான் விரும்பவில்லை.

77

எனவே, நான் அதை அழிக்க விரும்புகிறேன். எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டேன். அப்போது ஆதியாவுக்கு ஏழு வயது. நான் திருமணம் செய்து கொள்ளும் நபருக்கு நேரம் கொடுக்க வேண்டியிருந்தது. அவளைப் பற்றி யோசித்து, அவளைக் கவனிக்க யாராவது தேவை என்று தெரிந்த பிறகு, நான் திருமணத்தை நிறுத்திவிட்டேன்.” என்று கூறினார்

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
பவன் கல்யாண்
பவன் கல்யாண்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved