விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் 5 வருட பயணம் முடிவுக்கு வந்தது! உறுதி செய்த புகைப்படம்!
விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த 5 வருடமாக ஒளிபரப்பாகி வந்த, 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளதை, சீரியல் குழுவினர் குரூப் போட்டோ வெளியிட்டு உறுதி செய்துள்ளனர்.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த, 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் அண்ணன் - தம்பிகளின் பாச பிணைப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. கிட்ட தட்ட விஜயகாந்தின் 'வானத்தை போல' படத்தின் சாயலில் 2018-ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் மிக குறுகிய நாட்களிலேயே TRP -யில் டாப் 5 ரேட்டிங்கில் இடம் பிடித்து மாஸ் காட்டியது.
இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் விக்ரம், தீபிகா என பலர் நடித்து வருகிறார்கள். குறிப்பாக இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வி.ஜே.சித்ரா மிகவும் பிரபலமான நிலையில், பின்னர் சில சர்ச்சையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரை தொடர்ந்து முல்லை கதாபாத்திரத்தில், நடித்த காவ்யா அறிவுமணி... திரைப்பட வாய்ப்புகள் தேடி வர துவங்கியதும் சீரியலுக்கு குட்-பை கூறிவிட்டு வெளியேறினார்.
எதிர்பாராத பல திருப்புமுனைகளுடன் சுமார் 5 வருடம் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர், ஏற்கனவே பல முறை, முடிக்கப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில்... ஒருவழியாக மங்களகரமான எண்டு கார்டை போட்டு சீரியலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் இயக்குனர். இதனை உறுதி படுத்தும் விதமாக, சீரியல் குழுவினர்... ஒன்றாக சேர்ந்து எடுத்து கொண்ட, குரூப் போட்டோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாக, இந்த சீரியல் TRP தரவரிசை பட்டியலில் டாப் 5 இடத்தில் இடம்பெறவில்லை என்றாலும், டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து வந்தது. இந்த சீரியலுக்கு விஜய்யின் அம்மா ஷோபா உற்பட பல பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கடைக்குட்டியாக நடித்து வந்த கண்ணன், அதாவது நடிகர் சரவணன் விக்ரம் இப்போது பிக்பாஸ் வீட்டில் உள்ளதால், அவரை தவிர குரூப் போட்டோவில் அனைவருமே உள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Pandian Stores
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைவது இந்த சீரியலை முதல் நாளில் இருந்து விரும்பி பார்த்து வந்த பல ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியல் முடிவடைந்துள்ள நிலையில்... இந்த தொடருக்கு பதில் 'நீ நான் காதல்' என்கிற சீரியல் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படும் என கூறப்படுகிறது.