தனுஷின் கேப்டன் மில்லர்.. பூஜை போட்டு 1 வருஷம் ஆகிவிட்டது - Unseen புகைப்படங்களை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!
பிரபல இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் இசையில், முன்னணி நடிகர் தனுஷ் அவர்கள் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.
Dhanush
இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை பிரியங்கா மோகன் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்க, கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக நிகழ்ந்து வரும் சிவராஜ் குமார் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு முன்பே தனுஷ் பட நடிகை கர்ப்பமா? 7 மாதத்தில் பிறந்த குழந்தை.. குழப்பத்தில் ரசிகர்கள்!
Dhanush Priyanka mohan
மேலும் இந்த திரைப்படத்தில் சில ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மூத்த நடிகர் நாசர், சுதீப் கிஷன், பால சரவணன், விஜய் சந்திரசேகர், இளங்கோ குமரவேல், நிவேதிதா சதீஷ் மற்றும் வினோத் கிஷன் உள்ளிட்ட நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
Priyanka mohan
நடிகர் தனுஷ் இந்த படத்திற்கான தனது படபிடிப்பு பணிகளை முடித்து, கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டு தனது அடுத்த பட வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
Captain Miller Poojai
இந்த சூழலில் இன்று கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கான பூஜை இடபட்டு ஒரு வருடம் ஆன நிலையில், படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட சில வெளியிடப்படாத புகைப்படங்களை இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.