திருமணத்திற்கு முன்பே தனுஷ் பட நடிகை கர்ப்பமா? 7 மாதத்தில் பிறந்த குழந்தை.. குழப்பத்தில் ரசிகர்கள்!
பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்த நிலையில்... தற்போது இவருக்கு குழந்தை பிறந்துள்ள தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தனுஷ் நடித்த முதல் பாலிவுட் படமான 'ராஞ்சனா' படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தவர் ஸ்வாரா பாஸ்கர். இவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ள தகவலை அவரே சமூக வலைதளத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய குழந்தைக்கு (ராபியான்) Raabiyaa என பெயர் வைத்துள்ளனர்.
நடிகை ஸ்வரா பாஸ்கர், நீண்ட காலமாக, சமாஜ்வாதி கட்சியின் இளைஞரணி தலைவரும், இளைஞர் தலைவருமான ஃபஹத் அகமதுவை காதலித்து வந்த நிலையில்... கடந்த பிப்ரவரி மதம் இவர்கள் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்களின் திருமணவரவேற்ப்பு மிக பிரமாண்டமாக நடந்தது.
இதை தொடர்ந்து, ஸ்வரா பாஸ்கர் ஜூன் மாதம் கர்ப்பமாக இருக்கும் தகவலை புகைப்படம் வெளியிட்டு அறிவித்த நிலையில், தற்போது ஸ்வரா பாஸ்கருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்த தகவலை அவரே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஸ்வரா பாஸ்கருக்கு திருமணம் ஆகி 7 மாதங்களே ஆகும் நிலையில்... குழந்தை பிறந்துள்ளதால், திருமணத்திற்கு முன்பே ஸ்வரா கர்ப்பமாக இருந்தாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எனினும் இப்படி நடப்பது பாலிவுட் திரையுலகில் புதிதில்லையே என சில நாசுக்காக கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.