"நாங்க எப்போவுமே பிட்னெஸ் பார்ட்னர்ஸ்".. அப்பாவோடு ஜிமில் செம ஒர்க்அவுட் - காளிதாஸ் ஜெயராம் புகைப்படம் வைரல்!
பிறந்தது கேரளம் என்றாலும், தமிழகத்தை பூர்வீகத்தை கொண்ட நடிகர் தான் ஜெயராமன். கடந்த 35 ஆண்டுகளாக மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.
1988 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் திரையுலக பிரவேசத்தை அடைந்தவர் நடிகர் ஜெயராமன். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக மலையாள மொழியில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இந்த 2023 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் ஆபிரகாம் ஒஸ்ளர் என்ற திரைப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1993 ஆம் ஆண்டு தமிழில் வெளியான கோகுலம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இவர் கதையின் நாயகனாக அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை பல்வேறு நல்ல கதாபாத்திரங்கள் ஏற்று இவர் நடித்து வருகின்றார். அதிலும் குறிப்பாக மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நம்பி என்ற கதாபாத்திரத்திற்கு மிக கச்சிதமான இவர் நடித்திருந்தது பாராட்டுதலுக்கு உரியது.
மாடர்ன் சிலுக்காக மாறி... டாப் ஆங்கிளில் டபுள் டோஸ் கவர்ச்சி காட்டி கிக் ஏற்றும் சாக்ஷி அகர்வால்
ஜெயராமனுக்கும் பார்வதி என்பவருக்கும் கடந்த 1992 ஆம் ஆண்டு திருமணமான நிலையில் இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அந்த ஆண் குழந்தை தான் நடிகர் காளிதாஸ் ஜெயராமன். மகன் காளிதாஸ் ஜெயராமன் அவர்களும் தந்தையை போலவே ஒரு ஈடு இணையற்ற நடிகராக தற்போது வளர்ந்து வருகிறார்.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக இவர் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான மீன் "குழம்பும் மண் பானையும்" என்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரை உலகின் நாயகனாக மாறினார். அன்று தொடங்கி இன்று வரை தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் நல்ல பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
குறிப்பாக விக்ரம் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனின் மகனாக இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் அவருடைய ஐம்பதாவது திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார். அதேபோல கமலின் இந்தியன் 2 திரைப்படத்திலும் காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தானும் தனது தந்தையும் ஜிம்மில் ஒன்றாக இணைந்து உடற்பயிற்சி செய்யும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் காளிதாஸ் ஜெயராம். அப்பாவும், மாகவும் பிட்னெஸ் பார்ட்னர் என்பது அனைவரும் அறிந்ததே.