School College Holiday: நவம்பர் 24ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியானது அறிவிப்பு.!
நவம்பர் 24ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
thiruvarur
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை சேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 72-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் கந்தூரி விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித சந்தனக்கூடு விழா நிகழ்ச்சி வரும் 24ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவை காண வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வர். இந்நிலையில் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு வரும் நவம்பர் 24ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- புனித சந்தனக் கூடு விழா நிகழ்ச்சியை முன்னிட்டு நவம்பர் 24ம் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தாது. இது செலாவணி முறி சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் மாதத்தில் ஏதாவது ஒரு சனிக்கிழமைகளில் திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.