Asianet News TamilAsianet News Tamil

Shatabdi Express Train : சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் அருவி போல் கொட்டிய மழைநீர்.. பயணிகள் கடும் அவதி.!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காலை 7.10 மணிக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு 4 மணிக்கு சென்றடையும். 

Passengers suffered as rain water leaks into the Shatabdi Express train tvk
Author
First Published May 14, 2024, 7:10 AM IST | Last Updated May 14, 2024, 7:52 AM IST

சென்னையில் இருந்து கோவைக்கு சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காலை 7.10 மணிக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு 4 மணிக்கு சென்றடையும். வழக்கம் போல் நேற்று சென்னையில் இருந்து கோவை நோக்கி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் கோவை பீளமேடு அருகே வந்துக்கொண்டிருந்த போது கனமழை வெளுத்து வாங்கியது. 

இதையும் படிங்க: Suicide: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிப்பு; போலீசார் விசாரணை

அப்போது மழையில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் சி - 7 பெட்டியில் திடீரென மழை நீர் அருவி போல் கொட்டியது. ரயில் பெட்டியில் இருந்த மின்விளக்கின் மேற்புற பகுதியில் இருந்து தண்ணீர் கசிந்தது. இதனால் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் தூங்காமல் உட்காந்த படியே பயணம் செய்து கடும் அவதிக்குள்ளாகினர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: Savukku: கோவை சிறையில் கொல்லப்படுவேன்... என் கையை உடைத்தது இவர் தான்- நீதிமன்ற வளாகத்தில் கதறிய சவுக்கு சங்கர்

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரயில்வே அதிகாரிகள் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் மட்டுமே மழைநீர் ஒழுகியது. சம்பந்தப்பட்ட ரயில் பெட்டியை சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios