MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திருட்டு தனமாக எழில் செய்த வேலை... கண்கலங்க வைத்த சுடர்! நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

திருட்டு தனமாக எழில் செய்த வேலை... கண்கலங்க வைத்த சுடர்! நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் சமைத்த பிரியாணியை சாப்பிட்ட கவின் சூப்பராக இருக்கு என்று சொன்னதும் மற்ற குழந்தைகளும் வந்து விட இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

1 Min read
Author : manimegalai a
Published : May 29 2024, 10:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

அதாவது, அபி பிரியாணியை சாப்பிட்டு பார்த்து அப்படியே அம்மா சமைத்த மாதிரியே இருக்கு என்று சொல்ல மற்றவர்களும் சாப்பிட்டு பார்த்து ஆமாம் அப்படி தான் இருக்கு என்று சொல்கின்றனர். அடுத்து கனகவல்லி வர அவளையும் டேஸ்ட் செய்து பார்க்க சொல்ல பிரியாணியை சுவைத்த கனகவல்லி அப்படியே இந்து சமைத்த மாதிரியே இருக்கு, நீ எப்படி சமைப்பனு எனக்கு தெரியும். அப்படி இருக்கும் போது இது எப்படி இந்து சமைத்த மாதிரி வந்தது? யார் சமைத்தது என்று கேட்க சுடர் நான் தான் சமைத்தேன் என்று சொல்கிறாள். 

24
ninaithen vandhai serial

ninaithen vandhai serial

அடுத்து எழில் கீழே வர அவனையும் இந்து சமைத்தது போலவே இருப்பதாக சொல்லி சாப்பிட கூப்பிட சுடர் சமைத்தது என்று தெரிந்ததும் வேண்டாம் என்று மேலே சென்று விடுகிறான். இந்து சமைத்தது போல் இருப்பதாக எல்லாரும் சொன்னதால் எல்லாரும் தூங்கிய பிறகு வந்து சாப்பிடும் எழில் இந்துவை நினைத்து கண் கலங்க எழில் சாப்பிடுவதை பார்த்து இந்து சந்தோசப்படுகிறாள். 

Nayanthara: ரம்பா தொடையே தோத்துடும்! டைட் ஷார்ட்ஸ் அணிந்து... விக்கியுடன் மூச்சு முட்ட ரொமான்ஸ் செய்யும் நயன்!
 

34
ninaithen vandhai serial

ninaithen vandhai serial

அடுத்து பிள்ளைகள் எல்லாரும் ஸ்கூலில் நடக்கும் கம்பிட்டேஷனில் கலந்து கொள்ள போவதாக சொல்கின்றனர், ஆனால் அப்பாவுக்கு தெரிந்தா திட்டுவாரு என்றும் பயப்பட சுடர் நீங்க கலந்துக்கோங்க நான் பார்த்துக்கறேன் என்று சொல்கிறாள். 
 

44

அதன் பிறகு பிள்ளைகள் கீழே வர எழிலும் ஹாஸ்பிடல் கிளம்பி வர மனோகரி இன்னைக்கு உனக்கு சிறந்த டாக்டர் விருது தரப்போறாங்க, அதுக்கு நீ கண்டிப்பா வரணும் என்று சொல்லி கூப்பிட கனகவல்லி பிள்ளைகளையும் கூட்டி செல்ல சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

எல்லாமே ரிமோட் கண்ட்ரோல்! ஹாலிவுட் நடிகரின் வீட்டை மாடலாக வைத்து தளபதி கட்டியுள்ள வீட்டின் மதிப்பு இவ்வளவா?

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved