MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • எல்லாமே ரிமோட் கண்ட்ரோல்! ஹாலிவுட் நடிகரின் வீட்டை மாடலாக வைத்து தளபதி கட்டியுள்ள வீட்டின் மதிப்பு இவ்வளவா?

எல்லாமே ரிமோட் கண்ட்ரோல்! ஹாலிவுட் நடிகரின் வீட்டை மாடலாக வைத்து தளபதி கட்டியுள்ள வீட்டின் மதிப்பு இவ்வளவா?

தளபதி விஜய் நீலாங்கரையில் கட்டியுள்ள புதிய வீட்டின் மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : May 29 2024, 05:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

கோலிவுட் திரையுலகில் கடுமையான விமர்சனங்களையும், ஏற்ற தாழ்வுகளையும் சந்தித்த பின்னர், தற்போது வசூல் மண்ணாக உருவெடுத்திருப்பவர் தளபதி விஜய். சிறு வயதிலேயே சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய், பின்னர் தன்னுடைய தந்தை ஒரு இயக்குனர் என்பதால் அவர் இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.

27

 தளபதி விஜய்யின் ஆரம்பகட்ட சினிமா வாழ்க்கை, பள்ளம், மேடு நிறைந்ததாக இருந்தாலும்... பின்னர் தமிழ் சினிமாவே கொண்டாடும் முன்னணி நாயகனாக உயர்ந்தார். இவருக்கு தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, போன்ற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், பிகில், வாரிசு போன்ற படங்கள் பிறமொழி ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் ரசிக்கப்பட்டது.

Ethirneechal: குணசேகரன் கொட்டம் அடக்க போகுது! கப்புச்சிப்புனு 'எதிர்நீச்சலுக்கு' எண்டு கார்டு போடும் இயக்குனர்

37

அதே போல் தற்போது விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் கார்த்திருக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க, தளபதி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் விஜய்யுடன் இணைந்து இந்த படத்தில், பிரஷாந்த், பிரபு தேவா, போன்ற நடிகர்களும் நடித்து வருகிறார்கள். அதே போல் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிக்கும் நிலையில், மற்றொரு விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்திரி நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
 

47

இது ஒருபுறம் இருக்க தற்போது தளபதி விஜய் நீலாங்கரையில் பார்த்து... பார்த்து கட்டியுள்ள வீட்டின் மதிப்பு குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

சாமி பாடலை மிஞ்சிய ராஷ்மிக! அல்லு அர்ஜுனின் கியூட் ஆட்டத்தோடு வெளியான புஷ்பா 2 பட சூடான 'The Couple Song'!

57

விஜய் நீலாங்கரையில் உள்ள தன்னுடைய வீட்டை, பிரபல ஹாலிவுட் நடிகர் கெட்ஸ் ஹவுஸை  மாடலாக வைத்து தான் கட்டியதாக கூறப்படுகிறது. தளபதி விஜய் ஒருமுறை அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது, அப்போது அவர் ஹாலிவுட் நடிகர் tom cruises கடற்கரையை ஒட்டி கட்டி இருக்கும் கெஸ்ட் ஹவுஸை பார்த்து அசந்து போய் விட்டாராம். அதே போன்ற மாடலில் வீட்டை கட்ட வேண்டும் என்பதற்காக மும்பு கட்டிய வீட்டை இடித்து விட்டு தன்னுடைய வீட்டை ஆல்டர் செய்து காட்டினாராம் விஜய்.

67

விஜய் கட்டியுள்ள இந்த வீட்டில் அனைத்துமே ரிமோட் கண்ட்ரோலால் இயக்க கூடியது. பயோ மெட்ரிக் அனுமதி உள்ள வேலையாட்கள் மட்டுமே அவருடைய வீட்டிற்கு செல்ல முடியும். அதே போல் தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வந்தால் அவர்கள் தங்குவதற்கான சிறப்பு அறைகளுடன் இந்த வீட்டை விஜய் காட்டியுள்ளார்.

Ramarajan: ஏமாற்றத்தில் முடிந்த 12 வருட காத்திருப்பு! 'சாமானியன்' தோல்வியால் ராமராஜன் எடுத்த அதிரடி முடிவு!

77

அதே போல் தளபதி தனது மகள் ஷாஷாவிற்காக வீட்டின் உள்ளேயே பேட் மீண்டன் மைதானத்தை கூட அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கட்டியுள்ள இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 80 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved