"பேசிக் ரெஸ்பெக்ட் இல்ல.. ஏன்னா வளர்ப்பு அப்படி" - ஜோவிகா மற்றும் வனிதாவை கிழித்து தொங்கவிடும் ரஞ்சித் Wife!
Ranjith Wife Slams Jovika : பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறியது ஒரு பக்கம் என்றால், மாயா அண்ட் கோ பிரச்சனை வேறொரு பக்கம் தனியாக செல்கிறது. இதற்கிடையில் ஜோவிகாவை பிரபலங்கள் பலரும் வறுத்தெடுத்த வருகின்றனர் இது குறித்து இந்த பதிவில் காணலாம்.
Pradeep Antony Red Card
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கம் முதலிலேயே பல சுவாரசியமான திருப்புங்களோடு ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பிரதீப் அவர்களின் எலிமினேஷன் உலகநாயகன் கமலுக்கே பல எதிர் வினைகளை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.
Maya S Krishnan
இது ஒரு புறம் இருக்க பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ள மாயா மீது லெஸ்பியன் சர்ச்சை புதிதாக தொற்றியுள்ளது. அவரைப் பற்றி அவதூறாக பேசியதாக பிரபல பாடகியின் மீது நடிகை மாயாவின் பெற்றோர் விரைவில் வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
jovika vanitha
இது எல்லாம் ஒருபுறம் இருக்க பிக் பாஸ் வீட்டிற்குள் அட்ராசிட்டி செய்து வரும் பிரபல நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவிற்கு எதிராக பலரும் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிரபல செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்தும் அவருடைய மனைவியும் ஜோவிகாவை வறுத்தெடுத்துள்ளனர்.
Priya
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ரவீனா அனைவருக்கும் மரியாதை கொடுத்து நன்றாக பழகி வருவதாகவும், ஆனால் ஜோவிகாவோ, விசித்ரா போன்ற வயதில் மூத்தவர்களை கூட பெயர் சொல்லி அழைப்பதும், வா போ என்று கூறுவதும், என்று மரியாதை இல்லாமல் சுற்றித் திரிவதாக அவர் கூறியுள்ளார். மேலும் அடிப்படையாக ஒருவருக்கு நாம் தரவேண்டிய மரியாதையை அவர் யாருக்கும் கொடுப்பதில்லை என்றும், இது அனைத்திற்கும் காரணம் அவர் வளர்க்கப்பட்ட முறை தான் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய ரஞ்சித் அவர்களுடைய மனைவி "நான் மட்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றால் பூர்ணிமா முதல் மாயா முதல் ஜோவிகா வரை அனைவரையும் கிழித்து தொங்கவிடுவேன், அவர்களுடைய பேச்சுக்கு அஞ்ச மாட்டேன், அர்ச்சனாவை போல நான் அழ மாட்டேன் என்று கூறி ஜோவிகாவை வறுத்தெடுத்துள்ளார்.