தீபாவளி ஸ்பெஷல்.. கெத்தா களமிறங்கிய ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் - முதல் நாள் வசூல் நிலவரம் என்ன?
Japan Vs Jigarthanda Double X : தீபாவளி திருநாளை முன்னிட்டு நேற்று நவம்பர் 10ஆம் தேதி பிரபல நடிகர் கார்த்தியின் ஜப்பான் மற்றும் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா இணைந்து கலக்கி இருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய இரு திரைப்படங்களும் வெளியாகி உள்ளது.
Karthi
ஜப்பானாக கார்த்தி சோலோவாக களமிறங்கிய நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா இணைந்து கலக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகி நேருக்கு நேர் சண்டை செய்துள்ளனர் என்றே கூறலாம்.
தமிழ் சினிமாவிற்கு குக்கூ, ஜோக்கர், மெஹந்தி சர்க்கஸ், ஜிப்சி போன்ற தரமான பல திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நேற்று நவம்பர் 10ம் தேதி உலக அளவில் வெளியான திரைப்படம் தான் ஜப்பான்.
Chandra Mohan : திரையுலகில் மீளமுடியாத சோகம்! பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் மாரடைப்பால் காலமானார்!
Actress Anu Emmanuel
இந்த திரைப்படத்தில் கார்த்தி, அனுமானுவேல், சுனில், பாவா செல்லதுரை மற்றும் மூத்த நடிகர் வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாக இது உருவாகியுள்ளது என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், முதல் நாள் வசூலாக கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் வெறும் 2.5 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Japan Movie
இந்த படத்திற்கு முன்னதாக கார்த்தி 20 என்கின்ற தலைப்பில் அவர் திரை உலகில் களமிறங்கி 20 ஆண்டுகள் ஆனதையும், அவருடைய 25வது திரைப்படத்தை கொண்டாடும் வகையிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இருப்பினும் முதல் நாளிலேயே படத்திற்கு கிடைத்த சில நெகட்டிவ் ரெஸ்பான்ஸ் காரணமாக ஜப்பான் திரைப்படத்தின் பாக்ஸ் ஆப் கனவு நொறுங்கியுள்ளது.
நடிகர் கார்த்திக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் நிலையில், ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய வசூலை காணும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த திரைப்படம் இரண்டரை கோடி ரூபாயை மட்டுமே முதல் நாள் வசூல் ஆக பெற்றுள்ளது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
SJ Suryha
அதேபோல பிரபல இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ராகவா லாரன்ஸ் மற்றும் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா ஆகிய இருவரும் இணைந்து கலக்கி இருக்கும் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், உலக அளவில் இந்த திரைப்படம் சுமார் 4 கோடியை முதல் நாள் வசூலாக பெற்றுள்ளது. ஆனால் இது எதிர்பார்த்த வசூல் இல்லை என்றும், இனிவரும் நாட்களில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் அதிக வசூலை ஈட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.