MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அன்னபூரணிக்கு ஆப்பு வைத்த மிக்ஜாம் புயல்... வெள்ளத்தால் பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய நயன்தாரா படம்..!

அன்னபூரணிக்கு ஆப்பு வைத்த மிக்ஜாம் புயல்... வெள்ளத்தால் பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய நயன்தாரா படம்..!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த அன்னபூரணி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Dec 05 2023, 10:11 AM IST| Updated : Dec 05 2023, 11:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
annapoorani

annapoorani

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கும் சொந்தக்காரியாக இருக்கிறார். நயன்தாராவுக்கு லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் கிடைக்க முக்கிய காரணம் அவர் நடிப்பில் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் வரிசையாக ஹிட் ஆனதுதான். அப்படங்கள் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக வசூலையும் வாரிக்குவித்ததால் லேடி சூப்பர்ஸ்டார் என்கிற அந்தஸ்தை பெற்றார் நயன்.

24
Annapoorani Movie

Annapoorani Movie

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான விஜய், அஜித், ரஜினி போன்றவர்களின் படங்களில் நடித்தாலும், கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் நயன். அந்த வகையில் அவர் நடித்த திரைப்படம் தான் அன்னபூரணி. இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருக்கிறார். இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Annapoorani movie collection

Annapoorani movie collection

அன்னபூரணி திரைப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக ஜெய் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், பிக்பாஸ் பூர்ணிமா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும் பாக்ஸ் ஆபிஸில் அன்னபூரணி படம் நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது.

44
Annapoorani box office

Annapoorani box office

அன்னபூரணி திரைப்படம் முதல்நாளில் 60 லட்சமும், இரண்டாம் நாளில் 90 லட்சமும், மூன்றாம் நாளில் 87 லட்சமும் வசூலித்த நிலையில், நான்காம் நாளான நேற்று மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. இப்படம் நேற்று வெறும் ரூ.20 லட்சம் மட்டுமே வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூல் சரிவுக்கு முக்கிய காரணம் சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் தான் என கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தால் பெரும்லாமான பகுதிகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் அன்னபூரணி படம் வசூலில் அடிவாங்கி இருக்கிறது.

சென்னையில் இன்னும் இயல்பு நிலை திரும்பாததால், இப்படத்தின் வசூல் இன்றும் கம்மியாகவே இருக்க வாய்ப்புள்ளது. இதே நிலை நீடித்தால் இப்படம் 5 கோடி தான் மொத்தமாக வசூலிக்கும் என கூறப்படுகிறது. இப்படத்திற்காக நடிகை நயன்தாரா வாங்கிய சம்பளமே ரூ.10 கோடி என்பதால் அந்த பணம் கூட வருமா என்பதே கேள்விக்குறியாக உள்ளதாம். 

இதையும் படியுங்கள்... ராஜா பகவத் மாதிரி இருந்தவருக்கே இந்த நிலைமையா... கார்ல தான் குடும்பமே நடத்துறேன் - KGF விக்கி புலம்பல்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved