MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பிரியா பவானி சங்கர் வாழ்க்கையில் நடந்த சோகம்... தன் தாய்க்கு ஏற்பட்ட பாதிப்பால் கண்கலங்கிய நாயகி

பிரியா பவானி சங்கர் வாழ்க்கையில் நடந்த சோகம்... தன் தாய்க்கு ஏற்பட்ட பாதிப்பால் கண்கலங்கிய நாயகி

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், தன்னுடைய தாய்க்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து உருக்கமாக பேசி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Sep 22 2023, 03:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
priya bhavani shankar

priya bhavani shankar

செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த பிரியா பவானி சங்கர், சின்னத்திரை சீரியலின் மூலம் நடிகையாக அவதாரம் எடுத்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்கிற தொடரில் நடித்த அவருக்கு படிப்படியாக சினிமா வாய்ப்புகளும் கிடைத்தன. இதனால் சின்னத்திரைக்கு டாடா காட்டிவிட்டு சினிமாவுக்குள் நுழைந்தார் பிரியா. தமிழில் அவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் மேயாத மான்.

25
Actress priya bhavani shankar

Actress priya bhavani shankar

இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, ஓமணப்பெண்ணே, யானை, ருத்ரன் என தொடர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களில் ஹீரோயினாக நடித்த பிரியா பவானி சங்கருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. கோலிவுட்டில் தற்போது பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் கைவசம், இந்தியன் 2, டிமாண்டி காலனி 2, விஷாலுக்கு ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் 2 படம் என டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன.

35

இந்த நிலையில், புற்றுநோய்க்கு எதிராக போராடுபவர்களை ஊக்குவிக்கவும், நம்பிக்கை ஊட்டும் வகையிலும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் அப்பல்லோ கேன்சர் செண்டர் சார்பில் கொண்டாடப்பட்ட உலக ரோஜா தின நிகழ்ச்சியில் நடிகை பிரியா பவானி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாய் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் உருக்கமாக பேசினார்.

இதையும் படியுங்கள்... புதிய நாடாளுமன்றத்தில் நுழைந்ததும் தமன்னாவுக்கு வந்த அரசியல் ஆசை... நடிகைகளின் வருகையால் வெடித்த சர்ச்சை

45
priya bhavani shankar mom

priya bhavani shankar mom

கடந்த ஆண்டு தனது தாய்க்கு கேன்சர் கண்டறியப்பட்டதாகவும், அது ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டால் முற்றிலும் சரிசெய்துவிடலாம் என நம்பிக்கை ஊட்டினார். எனது தாய்க்கு கேன்சர் கண்டறியப்பட்டதும் சீக்கிரம் சரியாகிவிடும் என அவரிடம் அடிக்கடி சொல்லுவேன் என கூறிய பிரியா, இங்கு வந்திருந்த நிறைய பேர் அவர்களின் அனுபவங்களை சொன்னது ஊக்கமளிப்பதாக இருந்தது என நெகிழ்ச்சி உடன் தெரிவித்தார்.

55
priya bhavani shankar with her mother

priya bhavani shankar with her mother

என் அம்மாவுக்கு கேன்சர் கண்டறியப்பட்டபோது டாக்டர் என்னையும் பரிசோதனை செய்துகொள்ள சொன்னார்கள். கேன்சரால் என் அம்மாவை நான் இழக்க விரும்பவில்லை என்றும், மருத்துவர்களை நம்புங்கள் எனவும் அங்கு வந்திருந்த கேன்சர் பாதிப்பு உடையவர்களுக்கு பிரியா பவானி சங்கம் ஊக்கம் அளித்தார். மேலும் தனது தாய் பற்றி பேசுகையில் எமோஷனல் ஆன பிரியா பவானி சங்கர், மேடையிலேயே கண்ணீர் சிந்தியது காண்போரை கலங்க செய்தது.

இதையும் படியுங்கள்... 'எதிர்நீச்சல்' சீரியலில் அடுத்த இடியாக இறங்க உள்ளது யார்? மரண பீதி ரேணுகா - நந்தினி முகத்தில் ஆட்டம் போடுதே!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved