MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • புதிய நாடாளுமன்றத்தில் நுழைந்ததும் தமன்னாவுக்கு வந்த அரசியல் ஆசை... நடிகைகளின் வருகையால் வெடித்த சர்ச்சை

புதிய நாடாளுமன்றத்தில் நுழைந்ததும் தமன்னாவுக்கு வந்த அரசியல் ஆசை... நடிகைகளின் வருகையால் வெடித்த சர்ச்சை

குடியரசுத் தலைவரே இதுவரை அழைக்கப்படாத போது, தமன்னா உள்ளிட்ட நடிகைகள் அழைக்கப்பட்டது ஏன் என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Sep 22 2023, 11:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
tamannaah bhatia

tamannaah bhatia

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதும் வரலாற்று சிறப்புமிக்க, 33 சதவீத இட ஒதுக்கீடும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மகளிருக்கான இட ஒதுக்கீடு என்பதனால், இந்திய திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் சிலர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு இருந்தனர். கோலிவுட்டில் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகை தமன்னாவுக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வருகை தர அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

24
Actress tamannaah

Actress tamannaah

அதை ஏற்றுக்கொண்டு நாடாளுமன்றம் சென்ற தமன்னா, புதிய கட்டிடத்தை பார்வையிட்டார். பிரம்மாண்ட கட்டிடத்தை பார்த்து பிரம்மித்துபோன தமன்னா, அதன்பின் சொன்ன பரபர அரசியல் கருத்துகளும் பேசு பொருள் ஆகி உள்ளன. அதன்படி அவர் கூறுகையில், மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா என்பது ஒரு நல்ல முயற்சி, இதன்மூலம் சாமானியர்களும் அதிகளவில் அரசியலுக்கு வர தூண்டுகிறது என பேசினார்.

இதையும் படியுங்கள்... உயிரோடு இருக்கும் போதே தனக்கு தானே சிலை வைத்த நடிகர் விஜயகுமார்.. அவரின் வீட்டை பார்த்திருக்கீங்களா?

34
tamannaah New Parliament visit

tamannaah New Parliament visit

தமன்னாவுடன் நடிகைகள் குஷ்பு, திவ்யானந்தா, ஷெஹனாஸ் கில் உள்ளிட்டவர்களும் நாடாளுமன்றத்துக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர். தமன்னா நாடாளுமன்றத்துக்கு வந்ததுமட்டுமின்ற அரசியல் ஆசை குறித்து அவர் பேசியதெல்லாம் எக்ஸ் தளத்தில் டாப் டிரெண்டிங்கில் உள்ளன. இதேபோல் பாலிவுட் பிரபலங்களான கங்கனா ரனாவத், ஈஷா குப்தா ஆகியோர் முதல் நாளே நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

44
tamannaah at new parliament

tamannaah at new parliament

நாடாளுமன்றம் வந்த அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர். நடிகைகள் நாடாளுமன்றம் சென்றதும், அவர்கள் நாடாளுமன்றத்தில் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதேநேரத்தில், நாடாளுமன்றத்துக்கு குடியரசுத் தலைவரே இதுவரை அழைக்கப்படாத போது, நடிகைகள் அழைக்கப்பட்டது ஏன் என்கிற கேள்வியும் எதிர்க்கட்சிகள் தரப்பில் எழுப்பப்பட்டு வருகின்றன. 

இதையும் படியுங்கள்... ஆடையை இன்னும் மேல தூக்கு.. ஆடிஷன் சென்றபோது கேவலமாக நடந்து கொண்ட டாப் இயக்குனர் - தெறித்து ஓடிய சீரியல் நடிகை

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமன்னா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved