MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஆடையை இன்னும் மேல தூக்கு.. ஆடிஷன் சென்றபோது கேவலமாக நடந்து கொண்ட டாப் இயக்குனர் - தெறித்து ஓடிய சீரியல் நடிகை

ஆடையை இன்னும் மேல தூக்கு.. ஆடிஷன் சென்றபோது கேவலமாக நடந்து கொண்ட டாப் இயக்குனர் - தெறித்து ஓடிய சீரியல் நடிகை

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி ஆடிஷனுக்கு அழைத்த பிரபல இயக்குனர் ஒருவர் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாக சீரியல் நடிகை ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 22 2023, 10:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
archana mariappan

archana mariappan

சினிமாவில் எதிர்கொள்ளும் அட்ஜஸ்மெண்ட் பிரச்சனைகள் பற்றி நடிகைகள் சமீப காலமாக வெளிப்படையாக பேசி வருகின்றனர். சினிமா மட்டுமின்றி சின்னத்திரை நடிகைகளும் தாங்கள் எதிர்கொண்ட அட்ஜஸ்மெண்ட் பிரச்சனைகள் பற்றி யூடியூப் பேட்டிகளில் ஓப்பனாக பேசி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சீரியல் நடிகை அர்ச்சனா மாரியப்பன் தான் சினிமாவில் நடிக்க ஆடிஷனுக்கு சென்றபோது எதிர்கொண்ட கசப்பான அனுபவம் குறித்து பேசி உள்ளார்.

24
serial actress archana mariappan

serial actress archana mariappan

வாணி ராணி, அழகு, அழகி, வள்ளி போன்ற சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் அர்ச்சனா மாரியப்பன். இவர் சீரியல் தவிர சினிமாவிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். அந்த வகையில், சசிகுமாரின் நாடோடிகள், விக்ரம் பிரபு நடித்த வெள்ளைக்கார துரை, சுந்தர் சி உடன் முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் அர்ச்சனா மாரியப்பன்.

இதையும் படியுங்கள்... தனுஷ் உடன் ஓவர் நெருக்கம்... நடிகை அமலா பாலை வீடு தேடிச்சென்று பாட்ஷா பாணியில் மிரட்டிய ரஜினிகாந்த்..!

34
archana mariappan casting couch

archana mariappan casting couch

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், தான் எதிர்கொண்ட அட்ஜஸ்மெண்ட் பிரச்சனைகள் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது : “ஆடிஷனுக்கு வருமாறு ஒரு பெரிய இயக்குனரிடம் இருந்து அழைப்பு வந்தது. நர்ஸ் வேடத்தில் நடிக்க வேண்டும், உங்களுக்கு ஒரு வாரம் ஷூட்டிங் இருக்கும் என்றார்கள். நானும் அதற்கு சரி என சொன்னேன். அதையடுத்து அங்கிருந்த அவரது உதவி இயக்குனர்கள் அனைவரும் வெளியே சென்றனர்.

44
Actress archana mariappan

Actress archana mariappan

அப்போது இயக்குனர் என்னிடம், உன்னுடைய பேண்ட்டை முழங்கால் வரை தூக்கு என சொன்னார். எதுக்கு சார் என கேட்டதற்கு, நர்ஸ் வேடத்தில் நீங்கள் எப்படி இருப்பீங்க என்பதை பார்க்க தான் என சொன்னார். அன்று நான் சல்வார் அணிந்து சென்றிருந்ததால், சரி என முழங்கால் வரை தூக்கினேன். பின்னர் இன்னும் கொஞ்சம் மேலே தூக்க சொன்னார். அப்போது தான் அவர் வேறு நோக்கத்தில் இருப்பதை அறிந்தேன். அவர் டாப் இயக்குனர் என்பதால் அவரை எதுவும் சொல்ல முடியவில்லை. நாளை வந்து காஸ்டியூம் போட்டுக்கொள்கிறேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன்” என அர்ச்சனா கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்...  கன்னத்தில் பளார்னு அறைவிழும்! மேடையில் சில்மிஷம் செய்த கூல் சுரேஷை வெளுத்துவாங்கிய தொகுப்பாளினி ஐஸ்வர்யா

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved