கேரள விழாவில்.. முதல்வர் பினராயி விஜயனுடன் கமல், மோகன் லால், மற்றும் மம்மூட்டி! உலக நாயகன் நெகிழ்ச்சி பேச்சு!
கேரள அரசு நடத்தும், கேரளீயன் 2023 நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது. முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்த விழாவில் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
கேரள திரையுலகை சேர்ந்த இரு பெரு சினிமா ஜாம்பவான்கள், மற்றும் கோலிவுட் திரையுலகின் உலக நாயகன் ஆகியோர், கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று துவங்கிவைத்த கேரளீயம் 2023 நிகழ்ச்சியில் ஒன்று சேர்ந்து எடுத்து கொண்டுள்ள போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், "என் வாழ்க்கைப் பயணத்தில் கேரளா முக்கியமான இடம். கேரளாவில் உள்ளவர்கள் எனது கலை வாழ்க்கையை எப்போதும் ஊக்கப்படுத்தியுள்ளனர். நான் எப்பொழுதும் புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ளவோ அல்லது அதிலிருந்து உத்வேகம் பெறவோ கேரளாவுக்கு வருவேன். எனக்கு ஏழெட்டு வயசு இருக்கும்போது முதல்முறையாக மலையாளப் படம் பண்ணினேன். என் அன்பான இயக்குனர் சேதுமாதவன் சாரின் முதல் படமும் அதுதான் என்றார்.
இஷா அம்பானி முதல் வருண் - லாவண்யா வரை இத்தாலியில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் இத்தனை பேரா?
தொடர்ந்து பேசிய அவர் கேரளாவின் கலாச்சாரம், கேரளாவின் சினிமா காட்சிகளில் பெருபாலும் பிரதிபலிக்கும். இதனால் மலையாள சினிமாவின் மீது என் திரைப்பார்வை எப்போதும் இருக்கும். அதே போல் இங்கு எடுக்கப்படும் படங்கள் எப்போதும் சமூகப் பிரச்சனைகளையே பேசுகிறது. இது போன்ற விஷயங்களில் கேரளாவின் சமூக ஈடுபாடு மற்றும் விழிப்புணர்வை பார்க்கமுடிவதாக தெரிவித்தார்.
எனது மதனோத்ஸவம் திரைப்படம் கேரள திரைப்பட விழாவில் திரையிடப்படுவதை பெருமையாக கருதுகிறேன். எனது 21வது வயதில் மதனத்சவம் படத்தில் நடித்தே. அதன் பின்னால் இருந்த ஒவ்வொரு நபரும் எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தார்கள். 2017ல் அரசியலுக்கு வர முடிவு செய்த பிறகு, கேரளாவுக்கு வந்து உங்கள் அன்புக்குரிய முதல்வர் பினராயி விஜயனிடம் ஆலோசனை கேட்டேன். மக்களை மையப்படுத்திய அரசியல் பற்றிய எனது எண்ணமே கேரள மாதிரியிலிருந்து உருவானது. தமிழகத்தில் பிராந்திய நிர்வாகங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற எனது எண்ணத்தில், 1996 ஆம் ஆண்டு கேரளாவால் செயல்படுத்தப்பட்ட ஜானகிசூத்திரத்தை முன்மாதிரியாகக் கொண்டேன். ஜனநாயகம் உண்மையிலேயே பரவலாக்கப்பட்ட திட்டமிடல் மூலம் செயல்படுத்தப்படுகிறது, இதில் கேரளா இந்தியா ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முன்மாதிரியாக உள்ளது என்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தமிழகமும் - கேரளாவும் எல்லையை மட்டுமல்ல, கலாச்சாரத்தையும் பகிர்ந்து கொள்கின்றன. மக்களின் வளர்ச்சி மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் என்பது இரு மாநிலங்களின் கொள்கை. நாங்கள் இருவரும் இசை மற்றும் பாரம்பரிய கலைகளில் ஆர்வமுள்ளவர்கள். இளமையில் இருந்தே மலையாள சினிமாவில் பணியாற்ற எங்களின் மொழி ஒற்றுமை எனக்கு உதவியது - கமல்ஹாசன் கூறினார்.
அரசியல் குறித்தும், சினிமா குறித்தும் பல விஷயங்களை கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் கமல் பேசியதற்கு கை தட்டல்கள் அள்ளியது. இவரை தொடர்ந்து மம்மூட்டி, மோகன்லால் போன்ற பிரபலங்களும் கேரள விழாவில், கேரள நாட்டின் அருமை பெருமை பற்றி பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Ramya Pandian: பூங்காவுக்குள் பூத்து குலுங்கும் மலர்களுக்கு நடுவே... புன்னைகை பூவாக ரம்யா பாண்டியன்!