Ramya Pandian: பூங்காவுக்குள் பூத்து குலுங்கும் மலர்களுக்கு நடுவே... புன்னகை பூவாக ரம்யா பாண்டியன்!
நடிகை ரம்யா இயற்க்கை எழில் கொஞ்சும் பூங்காவில்... புன்னகை பூவாக மாறி எடுத்து கொண்டுள்ள, லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
நடிகை ரம்யா பாண்டியன், ஒரு இயற்க்கை ஆர்வலர். பிக்பாஸ் வீட்டில்... அணைத்து போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட செடிகளை எல்லாம் இவர்தான் வளர்த்தார்.
இதற்க்கு கமல்ஹாசன், ரம்யா பாண்டியனை வாழ்த்தியது மட்டும் இன்றி... பிக் பாஸ் சீசன் 5 ஃபைனலில் போது ரம்யா பாண்டியனுக்கு தன்னுடைய அன்பு பரிசாக, சில அரியவகை செடிகளின் விதைகளை பரிசாக கொடுத்து கௌரவித்தார்.
Akshara Reddy: துக்கம் தொண்டையை அடைக்க அம்மா இறந்ததை அறிவித்த பிக்பாஸ் அக்ஷரா! என்ன ஆச்சு தெரியுமா?
மேலும் வெளியில் சென்றதும், இயற்கைகளை பாதுகாக்கும் ஆர்வத்தை நீங்கள் அதிகமாக வெளிப்படுத்த வேண்டும் என கூறினார். எனவே ரம்யா பாண்டியன் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து செடி நடும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இயற்க்கை காதலியான ரம்யா பாண்டியன் தற்போது, பூங்காவில் இயற்கையை ரசித்தபடி எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்த சில புகைப்படங்களை அவர் வெளியிட, வைரலாக பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. ரம்யா பாண்டியன் ஊதா கலர் சல்வாரில் தன்னுடைய கியூட் சிரிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்துள்ளார்.