Akshara Reddy: துக்கம் தொண்டையை அடைக்க அம்மா இறந்ததை அறிவித்த பிக்பாஸ் அக்ஷரா! என்ன ஆச்சு தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, பிரபல மாடலும், நடிகையுமான அக்ஷாரா ரெட்டியின் தாயார் மரணமடைந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல அழகி போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடிய, அக்ஷாரா ரெட்டி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு, 'காசு மேல காசு' என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, கன்னடத்தில் வெளியான 'பில் கேட்ஸ்' என்ற படத்திலும் நடித்திருந்தார். அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பான வில்லா டூ வில்லேஜ் என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும், போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு கலக்கினார்.
Akshara Reddy
இருப்பினும் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார். இவருடைய விளையாட்டு அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றது. அதேபோல் இவர் சக போட்டியாளரான வருணை காதலித்து வருவதாகவும், வழக்கம்போல் சில சர்ச்சைகள் எழுந்தது. பிக்பாஸ் வீட்டில் சுமார் 80 நாட்கள் தாக்குப்பிடித்து அக்ஷரா டபுள் எவிக்ஷன் நடத்தப்பட்டு, வருணுடன் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர், நானும் வருணும் சிறந்த நண்பர்கள் மட்டுமே என்று விளக்கம் கொடுத்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சிறுவயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்த அக்ஷாரா ரெட்டியை, படிக்க வைத்தது முதல் அவரின் ஆசைகளையும் கனவுகளையும் நிறைவேற்றியது அவருடைய அண்ணன் தான். தன்னுடைய அண்ணன் பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கூட மிகவும் உருக்கமாக பேசி இருந்தார் அக்ஷரா. அதைப்போல் தன்னுடைய அம்மா தான் தனக்கு, பக்கபலமாக இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் அக்ஷாராவின் அம்மா, கௌரி சுதாகர் ரெட்டி... கடந்த சில நாட்களாக சிறுநீரகப் பிரச்சனை காரணமாக டயாலிசிஸ் செய்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அக்டோபர் 29ஆம் தேதி, இரவு 8 மணிக்கு உயிரிழந்த விட்டதாக அக்ஷாரா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலர் அக்ஷராவுக்கு தங்களின் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Rambha Re-Entry: 47 வயதில் ரீ-என்ட்ரிக்கு தயாரான நடிகை ரம்பா! மீண்டும் நடிக்க வர இது தான் காரணமாம்.!