Nayanthara: இந்த தீபாவளிக்கு நயன்தாராவின் லோ பட்ஜெட்... ஜாக்கெட் டிசைனில் பிளவுஸ் தச்சு போட்டு அசத்துங்க!
இந்த வருஷம் தீபாவளிக்கு நயன்தாரா ஸ்டைலில் ரொம்ப சிம்பிளாகவும், ரொம்ப லோ காஸ்ட் பட்ஜெட்டில் அனைவருமே தைத்து போடும்படியான ஜாக்கெட் டிசைன்ஸ்சை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு, எந்த அளவுக்கு ஆண் ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவிற்கு பெண் ரசிகர்களும் உள்ளனர்.
குறிப்பாக இவர் மாடர்ன் மற்றும் ட்ராடிஷ்னல் என எந்த உடை அணிந்தாலும், அவருக்கு பக்காவாக இருக்கும். எனவே இவரின் ஸ்டைலை ஃபாலோ பண்ணும் பல பெண்கள் உள்ளனர்.
Rambha Re-Entry: 47 வயதில் ரீ-என்ட்ரிக்கு தயாரான நடிகை ரம்பா! மீண்டும் நடிக்க வர இது தான் காரணமாம்.!
பொதுவாக நடிகைகள் என்றால், மிகவும் அதிகமாக பணம் செலவு செய்து... தங்களுடைய ஜாக்கெட்டை தைத்து கொள்வார்கள் என பலர் நினைப்பது உண்டு.
இது ஒரு சில நடிகிகளுக்கு பொருந்தும் என்றாலும்... நடிகை நயன்தாரா எப்போதுமே பெண்களை கவரும் விதத்தில் மட்டும் ஜாக்கெட் அணியாமல், லோ பட்ஜெட் காஸ்டில் தைத்து போடும் படியான பிளவுஸ் தான் அதிகம் அணிகிறார்.
இவ்வளவு ஏன், நயன்தாராவின் திருமண ஜாக்கெட் கூட நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அதில் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து, ஆரி ஒர்க் போன்றவை இல்லாமல்... மிகவும் எளிமையாக லாங் ஸ்லீவ் வைத்து அந்த ஜாக்கெட் தைக்கப்பட்டிருக்கும்.
உங்களுக்கு லாங் ஸ்லீவ் பொருத்தமாக இருக்கும் என்றால்... நயன்தாராவின் திருமண ஜாக்கெட்டை நீங்கள் 500 முதல் 700 ரூபாய்க்கு கூட தைத்து கொள்ளலாம் அந்த அளவுக்கு Affordable டிசைன் தான் அது.
அதே போல் நயன்தாரா அணிந்திருக்கும் பல ஜாக்கெட்டுகள், அந்த சேலையில் வரும் ஜாக்கெட் பீஸ்சில் மிகவும் எளிமையாக எந்த ஒரு ஒர்க்கும் இல்லாமல் தைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் அவரின் நெக் டிசைன்ஸ் மிகவும் நேர்த்தியாக இருக்கும். ஒல்லியாக இருப்பவர்கள் மற்றும் மீடியம் வெயிட்டில் இருப்பவர்கள்... நயன்தாரா போல் கிளோஸ் நெக் ஜாக்கெட் அணிந்தால் நச்சுன்னு இருக்கும். இந்த தீபாவளிக்கு வேண்டும் என்றால் ட்ரை பண்ணி பாருங்க.
இதை தொடர்ந்து நயன்தாரா, அதிகம் விரும்பி அணிவது என்றால் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் தான். ஒரு வேளை நீங்க ரொம்ப மாடர்ன் பொண்ணு என்றால்... மறக்காமல், நயன்தாரா ஃபாலோ பண்ணும் நெக் கட்டிங் டிசைனில் இந்த தீபாவளிக்கு ஜாக்கெட் போட்டு அசத்துக்கு அது உங்களை மேலும் அழகாக காட்டும்.
நயந்தாரா அணியும் ஜாக்கெட்டுகளில் கைகள் குட்டையாக இருக்காது, முட்டிக்கு மேல் இருக்கும் வரை இருக்கும். அதே போல் முன் தோல் பட்டை கொஞ்சம் பெரிதாக இருப்பது போல் இருக்கும். இந்த மாடலை குண்டாக இருப்பவர்கள் கூட ஃபாலோ செய்தால் உங்கள் கைகள் ஒல்லியாக தெரியும். எனவே இந்த முறை ட்ரை பண்ணி பாருங்க. தீபாவளியை ரொம்ப ஜோராக கொண்டாடுங்க.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D