பெங்களூருவில் இன்று ஜீரோ ஷேடோ டே என்று அழைக்கப்படும் நிழல் இல்லா நாள் நிகழ உள்ளது.

நிழல்கள் என்பது நம்மை எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் ஆண்டில் 2 நாட்கள் மட்டும் ஒரு சில நிமிடங்களுக்கு இந்த நிழல் நம்மை பின் தொடராது. இதை தான் நிழல் இல்லா நாள் என்று அழைக்கிறோம். பெங்களூருவாசிகள் ஏப்ரல் 24 அதாவது இன்று ஒரு அரிய வானியல் நிகழ்வை காண உள்ளனர். ஜீரோ ஷேடோ டே என்று அழைக்கப்படும் நிழல் இல்லா நாள் இன்று நிகழ உள்ளது. இந்த நிகழ்வு இன்று மதியம் 12:17 மற்றும் 12:23 க்கு இடையில் நிகழும்.

நிழல் இல்லா நாள் எப்படி நிகழ்கிறது?

பூமியின் வட பகுதியையும், தென் பகுதியையும் சரிசமமாக பிரிக்கும் கோடு நிலநடுக்கோடு என்று அழைக்கப்படுகிறது. இதில் 23.5 டிகிரி மேலே வடக்காக இருப்பது கடக ரேகை என்றும், கீழே -23.5 டிகிரி இருக்கும் தென் பகுதிகள் மகர ரேகை என்றும் அழைக்கப்படுகிறது.

தெலுங்கானாவில் காற்றில் சரிந்த பாலம்! இதைத்தான் 8 வருஷமா கட்டிகிட்டு இருந்தாங்களா!

இந்த இரண்டு பகுதிகளிலும் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் சூரிய வெளிச்சம் செங்குத்தாக விழும். அந்த வகையில் இன்றைய தினம் கடக ரேகையில் சூரிய வெளிச்சம் செங்குத்தாக விழுகிறது. நிலநடுக்கோட்டில் இருந்து 23.5 டிகிரி மேலே பார்த்தால் தென்னிந்திய பகுதிகள் தெரியும். எனவே இன்றைய தினம் பெங்களூருவில் இன்று நிழல் இல்லா நாள் நிகழ உள்ளது. 

Scroll to load tweet…

நிழல் இல்லா நாள் நிகழ்வு கடக ரேகை மற்றும் மகர ரேகைக்கு அருகில் உள்ள பகுதிகளில் வருடத்திற்கு இரண்டு முறை நடக்கும். பொதுவாக இந்த நிகழ்வு மே மற்றும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடக்கும். இந்திய நகரங்களான சென்னை, மும்பை மற்றும் புனே ஆகியவை கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையில் அமைந்துள்ளதால், நிழல் இல்லா நாள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

5,785 கோடி சொத்து... நாட்டின் நம்பர் 1 பணக்கார வேட்பாளர்! இவர் யாருன்னு தெரியுமா?

இந்த நிழல் இல்லா நாள் பொதுவாக ஒரு வினாடியின் ஒரு பகுதியே நீடிக்கும், ஆனால் விளைவுகளை இரண்டு நிமிடங்களுக்கு பார்க்கலாம். பள்ளி, கல்லூரிகள், அறிவியல் மையங்களில் இந்த நிகழ்வை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.