வருண் - லாவண்யா திருமணம்! இத்தாலியில் ஒன்னு கூடி... மது பார்ட்டில் மஜா பண்ணும் மெகா ஸ்டார் குடும்பன்! போட்டோஸ்
நட்சத்திர காதல் ஜோடியான வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமணம் நாளை நடைபெற உள்ள நிலையில், இவர்கள் குடும்பத்துடன் இத்தாலியில் மது பார்ட்டி கொண்டாடிய போட்டோஸ் வைரலாகி வருகிறது.
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி மகனான, வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி இருவரும் 'மிஸ்டர்' திரைப்படத்தில், ஒன்றாக இணைந்து நடிக்கும் போது, நன்கு, பேசி பழகி புரிந்து கொண்டு காதலிக்கவும் துவங்கினர். இவர்கள் இருவரும் காதலிக்க துவங்கியதும், தங்களின் காதலை வெளிப்படுத்திய இடமும் இத்தாலிதான். எனவே எங்கு இவர்களின் காதல் உருவானதோ... அதே இடத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
அதன்படி இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்த நிலையில், நாளை இத்தாலியில் இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இவர்கள் இருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி ஆகிய இரு வீட்டு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இத்தாலிக்கு சென்றுள்ளார்.
திருமணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகவே மெகா ஸ்டாரின் ஒட்டு மொத்த குடும்பமும், இத்தாலிக்கு சென்றுள்ளதால், அடிக்கடி வெளியிடங்களுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்து வெகேஷனுக்கு சென்றது போல் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி இருவரும் தங்களுடைய குடும்பத்தினருக்கு பிரமாண்ட காக்டெய்ல் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ளனர். இதில மெகாஸ்டார் சிரஞ்சீவி, சுரேகா, ராம்சரண், உபாசனா, சிருவின் மகள்கள், பவன் கல்யாண், அவரது மனைவி, நாகபாபு, நிஹாரிகா, சாய்தரம் தேஜ், வைஷ்ணவ் தேஜ், பன்னி, சினேகரெட்டி, சிரிஷ், பாபி, அல்லு அரவிந்த் ஆகியோர் அனைவருமே பங்கேற்றுள்ளனர்.
இந்த மது பார்ட்டியில் வருண் தேஜ் மற்றும் லாவண்யா இருவரும் ராயல் லுக்கில் ஜொலிக்கிறார்கள். இதில் வருண் வெள்ளை பிளேசர், கருப்பு பேன்ட், லாவண்யா வெள்ளை உடையில் ஜொலிக்கிறார்கள். அதே போல் இவர்களின் ஒட்டுமொத்த குடும்பமும் கருப்பு மற்றும் வெள்ளை நிற உடைகள் அணிந்திருப்பதை பார்க்க முடிகிறது.
Image: Instagram
நேற்று மது பார்ட்டி நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று (அக்டோபர் 31) ஹல்தி மற்றும் மெஹந்தி விழா நடைபெறுகிறது. இதை தொடர்ந்து, நாளை (நவம்பர் 1) மதியம் 2 மணி 48 நிமிடத்தில் திருமண நடைபெறுகிறது. இத்தாலியில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டாலும், இவர்களின் வெட்டிங் ரிசப்ஷன், நவம்பர் 5-ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில் தென்னிந்திய திரையுலகம் மற்றும் பல அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டு நட்சத்திர ஜோடிகளை வாழ்த்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D