எல்லை மீறி பேசிய பிரதீப்! பொட்டி படுக்கையை எடுத்து கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற ஓடிய கூல் சுரேஷ்!
பிரதீப் எல்லை மீறி பேசியதால், கூல் சுரேஷ் இனி பிக் பாஸ் வீட்டில் இருக்க மாட்டேன் என கூறி, வெளியேறும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவி தொலைக்காகாட்சியில், அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல் வாரத்தில் நடந்த நாமினேஷன் படலத்தில், நடிகை அனன்யா ராவ் குறைவான வாக்குகளுடன், முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து பவா செல்லதுரை அதே வாரம் வெளியேறியதால் இரண்டாவது வாரம் அனைத்து போட்டியாளர்களும் எவிக்ஷனில் இருந்து தப்பினர்.
இதை தொடர்ந்து மூன்றாவது போட்டியாளராக விஜய் வர்மா வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த வாரம் யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகிய இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டது மட்டும் இன்றி, அர்ச்சனா, கானா பாலா, தினேஷ் கோபால சுவாமி, அன்ன பாரதி, பிராவோ ஆகிய 5 பேர் பிக்பாஸ் வீட்டின் உள்ளே வயல் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ளனர்.
எனவே தற்போது மீண்டும் 18 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் வீடு பிரச்சனைகளால் சூடுபிடித்துள்ளது. புதிதாக பிக்பாஸ் வீட்டின் உள்ளே வந்த 5 போட்டியாளர்களை பழிவாங்கும் விதத்தில் கட்டம் கட்டி ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர் பழைய போட்டியாளர்கள். கண்டெண்ட் கொடுக்க வேண்டும் என முதல் நாளே, மாயாவும், பூர்ணிமாவும் வயல் கார்டு போட்டியாளர்களை நோகடித்த காட்சிகளையும் நேற்றையதினம் பார்க்க முடிந்தது.
இந்நிலையில் பழைய போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொள்ளும் புரோமோ தான் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இன்று, போட்டியாளர்களுக்கு தலையில் மணி ஒன்றை கட்டிக்கொண்டு அதில் சத்தம் வராதபடி ஃப்ரீஸ் -ஆகி ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்கிற டாக்ஸ் ஒன்றை கொடுக்கிறார். பிரதீப் தனியாக தலையில் மணி கட்டிக்கொண்டு அங்கும், இங்கும் நடக்க, வாண்டடாக வந்து வாயை கொடுத்து வாங்கி கட்டி கொள்கிறார் கூல் சுரேஷ்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பிரதீப் மரியாதை இல்லாமல் பேச பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என கூல் சுரேஷ் தன்னுடைய பெட்டி படுக்கையுடன் வெளியேறியதை முதல் புரோமோவில் பார்க்க முடிந்தது.
இதைத்தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், கூல் சுரேஷை பிரதீப், சில்லற பையன் என மரியாதை இல்லாமல் வாடா போடா என பேசுகிறார். கூல் சுரேஷுக்கு ஆதரவாக, விஷ்ணு, நிக்சன் ஆகியோர் பரிந்து பேச, நான் அப்படிதான் பேசுவேன் என காரம் சாரமாக பேசுகிறார். இதனால் வரும் பிரச்சனையால் தான் கூல் சுரேஷ் வெளியேறும் அளவுக்கு ஆவேசம் அடைகிறார் என தெரிகிறது.