இஷா அம்பானி முதல் வருண் - லாவண்யா வரை இத்தாலியில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் இத்தனை பேரா?
வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமணம் இன்று இத்தாலியில் கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், இதற்க்கு முன் இத்தாலியில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
டோலிவுட் திரையுலகின் மெகா இளவரசர் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும், வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமணம் இத்தாலியில் இன்று மாலை 2 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. இவர்களின் திருமணத்தை முன்னிட்டு மெகா ஸ்டார் குடும்பமே இத்தாலிக்கு படையெடுத்துள்ளது. அவ்வப்போது இவர்களின் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.
வருண் - லாவண்யா திருமணம் இத்தாலியில் நடைபெற்று வரும் நிலையில், மற்ற எந்த இந்திய பிரபலங்கள் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர் என்கிற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி - திரைப்பட தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா திருமணம் இத்தாலியில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி பெங்காலி பாரம்பரிய முறையில் நடந்தது.
Ramya Pandian: பூங்காவுக்குள் பூத்து குலுங்கும் மலர்களுக்கு நடுவே... புன்னைகை பூவாக ரம்யா பாண்டியன்!
இவரை தொடர்ந்து, பாலிவுட் நட்சத்திர நாயகி அனுஷ்கா ஷர்மா, தன்னுடைய நீண்ட நாள் காதலரான நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியை, இத்தாலி நாட்டில் உள்ள டஸ்கனியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான வில்லாவில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி நடந்தது. தற்போது இந்த ஜோடிக்கு வாமிகா கோலி என்கிற மகள் உள்ளார்.
அதே போல் 'ஹேட் ஸ்டோரி 2' படத்தின் மூலம் பிரபலமான, பாலிவுட் நடிகை சுர்வீன் சாவ்லா, தொழிலதிபர் அக்ஷய் தாக்கூரை இத்தாலியில் தான் ரகசிய திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் 2015 இல் நடந்தது. திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து தான் திருமணம் செய்து கொண்டதாக இந்த ஜோடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்தியப் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் இந்தியாவில் நடந்திருந்தாலும், இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் நடைபெற்றது. இதனால், பல இந்திய பிரபலங்களின் திருமணங்கள் நடக்கும் இடமாக இத்தாலி மாறி வருகிறது என கூறப்படுகிறது.
இந்த ஜோடிகளை தொடர்ந்து, இன்று லாவண்யா திரிபாதி மற்றும் வருண் தேஜ் திருமணம் இத்தாலியில் உள்ள போர்கோ சான் ஃபெலிஸ் ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த திருமண விழாவில் மெகாஸ்டார் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண், அல்லு அர்ஜுன், அல்லு ஷிரிஷ், நிதின், மெகா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நவம்பர் 5ம் தேதி ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Akshara Reddy: துக்கம் தொண்டையை அடைக்க அம்மா இறந்ததை அறிவித்த பிக்பாஸ் அக்ஷரா! என்ன ஆச்சு தெரியுமா?