மைனஸ் டிகிரி குளிரில் மண்டியிட்டு புரபோஸ் செய்த நடிகர்... காதலை ஏற்று திருமணத்துக்கு ஓகே சொன்ன எமி ஜாக்சன்
மிஷன் பட நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய காதலன் எட் வெஸ்ட்விக்கின் புரபோஸலை ஏற்று அவரை மணமுடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளார்.
லண்டனை சேர்ந்தவர் எமி ஜாக்சன். இவர் மதராஸபட்டினம் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து தாண்டவம், விஜய்யின் தெறி, ரஜினியுடன் 2.0, ஷங்கர் இயக்கிய ஐ போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்திய எமி ஜாக்சன், ஜார்ஜ் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு காதலிக்க தொடங்கினார். சுமார் 4 ஆண்டுகள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி, திருமணத்துக்கு முன்னரே குழந்தையும் பெற்றுக்கொண்டனர்.
குழந்தை பெற்ற பின்னர் ஜார்ஜ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரேக் அப் செய்து பிரிந்தார். இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு பிரிட்டிஷ் நடிகரான எட் வெஸ்ட்விக் என்பவருடம் எமி ஜாக்சனுக்கு காதல் ஏற்பட்டது. சுமார் இரண்டு ஆண்டுகள் காதலித்து லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்த இந்த ஜோடி தற்போது திருமணத்துக்கு தயாராகி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... நடுரோட்டில் காதலனுக்கு லிப்லாக் கிஸ்... போட்டோவை வெளியிட்டு இணையத்தில் டிராபிக் ஜாம் உண்டாக்கிய எமி ஜாக்சன்
அதன்படி எட் வெஸ்ட்விக்கின் புரபோஸலை எமி ஜாக்சன் ஏற்றுக்கொண்டுள்ளார். பனிப்பிரதேசத்தில் அமைந்துள்ள அழகிய பாலத்தின் நடுவே மண்டியிட்டு எமி ஜாக்சனுக்கு எட் வெஸ்ட்விக் புரபோஸ் செய்ய எமியும் அதற்கு ஓகே சொல்லி உள்ளார். அங்கேயே இவர்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயமும் செய்துகொண்டுள்ளனர். இதனால் விரைவில் இவர்கள் திருமணம் செய்ய உள்ளது உறுதியாகி உள்ளது.
சினிமாவை மிஞ்சும் அளவுக்கு செம்ம ரொமாண்டிக் ஆக எட் வெஸ்ட்விக் புரபோஸ் செய்துள்ளதை புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவிலும் பகிர்ந்துள்ளார் எமி. இதைப்பார்த்த நெட்டிசன்கள் இந்த அழகிய ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை எமி ஜாக்சன் தமிழில் தற்போது மிஷன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... உறைபனியில் ஜோவுடன் செம என்ஜாய்.. புத்தாண்டை பின்லாந்தில் கொண்டாடிய சூர்யா - லவ்லி வைரல் புகைப்படங்கள் இதோ!