நடுரோட்டில் காதலனுக்கு லிப்லாக் கிஸ்... போட்டோவை வெளியிட்டு இணையத்தில் டிராபிக் ஜாம் உண்டாக்கிய எமி ஜாக்சன்
நடிகை எமி ஜாக்சன், தன் காதலருடன் நடு ரோட்டில் லிப்லாக் முத்தம் கொடுத்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இணையத்தில் வைரலாக்கி உள்ளார்.
Amy jackson
பிரிட்டிஷ் நடிகையான எமி ஜாக்சன் கடந்த 2010-ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து விக்ரமின் தாண்டவம் படத்தில் நடித்த அவர், விஜய்யுடன் தெறி, ஷங்கர் இயக்கிய ஐ மற்றும் ரஜினிக்கு ஜோடியாக 2.0 என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
Amy jackson
நடிகை எமி ஜாக்சன் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். திருமணம் செய்துகொள்ளாமலேயே அவருடன் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்த எமி ஜாக்சனுக்கு ஒரு ஆண்குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்ததை அடுத்து இருவரின் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. இதையடுத்து திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இந்த ஜோடி கடந்த 2019-ம் ஆண்டு திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தது.
இதையும் படியுங்கள்... ஆற்றில் முக்காடோடு கவர்ச்சி குளியல் போடும் திவ்யா துரைசாமி! இளசுகளை ஏங்க வைத்த ஹாட் போட்டோ ஷூட்!
Amy jackson
இதையடுத்து பிரிட்டிஷ் நடிகரான எட் வெஸ்ட்விக் என்பவர் மீது காதலில் விழுந்தார் எமி ஜாக்சன். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். அடிக்கடி காதலனுடன் டேட்டிங் சென்றபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்ஸை அள்ளும் எமி ஜாக்சன், தன்னுடைய காதலனின் பிறந்தநாளன்று அவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஒரு தொகுப்பாக பதிவிட்டுள்ளார்.
Amy jackson
அதில் நடுரோட்டில் நின்றுகொண்டு இருவரும் லிப்லாக் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படமும் இடம்பெற்று உள்ளது. இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் நீங்க ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ண வேற இடமே கிடைக்கலயா என கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ எமிஜாக்சனின் காதலர் எட் வெஸ்ட்விக்கிற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். எமி ஜாக்சனின் இந்த புகைப்படம் தான் தற்போது செம்ம வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... "தர்பார் படத்துல இல்லாத ஒன்னு ஜெயிலர் படத்துல இருக்கும்" - யோகி பாபு சொன்ன சீக்ரெட் தகவல்!