- Home
- Gallery
- தனுஷ் நடிப்பில் வெளியான 'ராயன்' படத்தின் முதல் நாள் வசூலே இத்தனை கோடியா? தெறிக்கவிட்ட கலெக்ஷன்!
தனுஷ் நடிப்பில் வெளியான 'ராயன்' படத்தின் முதல் நாள் வசூலே இத்தனை கோடியா? தெறிக்கவிட்ட கலெக்ஷன்!
நடித்தார் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான, 'ராயன்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Raayan Movie Release
நடிகர் தனுஷ், தன்னுடைய 50-ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை எந்த இயக்குனருக்கும் கொடுக்காமல், தானே இயக்கி நடித்துள்ளார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 2000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களத்தில், வடசென்னை பின்னணியில் எடுக்கப்பட்டிருந்தது.
Raayan movie cast
இந்த படத்தில், எஸ் ஜே சூர்யா, சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, தூஷரா விஜயன், பிரகாஷ்ராஜ், சரவணன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தனுஷின் ரசிகர்கள் இந்த படத்தை நேற்று ஆரவாரத்தோடு வரவேற்ற நிலையில், இப்படத்திற்கு ஒரு தரப்பினர் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும், மற்றொரு தரப்பினர் கலவையான விமர்சனங்களையே கொடுத்து வருவதையும் பார்க்க முடிகிறது. ஆனால் இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை கடந்து முதல் நாளே மிகப்பெரிய வசூலை ஈட்டி உள்ளது.
Raayan first day collection:
சுமார் 90 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், முதல் நாளே 12.5 கோடி வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சனி - ஞாயிறு என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் இப்படத்தின் வசூல் அதிகரிக்க கூடும் என திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
AR Rahman music:
இந்த படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ளதால்... அதிகப்படியான நடிக்கும் காட்சிகளை மற்ற நடிகர்களுக்கு விட்டு கொடுத்துவிட்டு ஒதுங்கி நிற்கிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். செண்டிமெண்ட், ஆக்ஷன் என பவர் ஃபேக்ட் காட்சிகளோடு படம் வெளியாகி இருந்தாலும், திரைக்கதையில் உள்ள தடுமாற்றம் இப்படத்திற்கு பிரச்சனையாக அமைந்துள்ளது. மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசை, மற்றும் BGM போன்றவை இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.