MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மருத்துவ மாணவி தற்கொலை.. பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்.. துன்புறுத்திய சீனியர்கள்.. அதிரடி ஆக்ஷன்.!

மருத்துவ மாணவி தற்கொலை.. பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்.. துன்புறுத்திய சீனியர்கள்.. அதிரடி ஆக்ஷன்.!

தனியார் மருத்துவ கல்லூரி மயக்கவியல் துறை மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் மற்றும் சீனியர் மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Oct 13 2023, 12:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி. நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் சுகிர்தா (27). இவர் குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் (MD) அனஸ்தீசியா படித்து வந்தார். கல்லூரி வளாகத்திலுள்ள விடுதியில் தங்கி பயின்று வந்தார். கடந்த 6ம் தேதி கல்லூரிக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார். இதனை அறிந்த சக மாணவிகள் விடுதிக்கு சென்றுள்ளனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

அப்போது சுகிர்தா இருந்த அறை உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதுகுறித்து மாணவியர் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி சுகிர்தா இறந்த நிலையில் கிடந்துள்ளார்.  உடல் தசைகளை தளர்வடையச் செய்யும் மருந்தை தனக்குத் தானே ஊசி மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. 

இதையும் படிங்க;- விடுதியில் மருத்துவ மாணவி தற்கொலை! சிக்கிய கடிதம்! அவங்க 3 பேரும் தான்! அவரு பாலியல் ரீதியாக இப்படி செய்தாரு.!

35

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுகிர்தா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது அறையை சோதனையிட்ட போது கடிதம் ஒன்று சிக்கியது. அதில், பரமசிவன் என்ற பேராசிரியர் உடலளவிலும், மனதளவிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், டாக்டர் ஹரீஷ் என்ற சீனியர் மாணவர், டாக்டர் பிரீத்தி என்ற சீனியர் மாணவி ஆகியோர் மனதளவில் துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

45

இதனிடையே தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என உயிரிழந்த மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், குற்றம்சாட்ட 3 பேர் இதுவரை கைது செய்யப்படாததது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக அரசியல் தலைவர் கூறிவந்தனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

55

இந்நிலையில், குற்றம்சாட்டிய பேராசிரியர் பரமசிவம் மற்றும் சீனியர் மாணவர்கள் பிரீத்தி, ஹரிஷ் ஆகிய மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்திடம் கல்லூரி நிர்வாகம் அளித்த அறிக்கையில் பேராசிரியர் சஸ்பெண்ட் என தகவல் வெளியாகியுள்ளது. கல்லூரி விடுதி குறித்து வரும் புகார்களை விசாரிக்க குழு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved