ஈரான் அதிபர் இப்ராஹிம்.. மலையில் மோதி விபத்தில் சிக்கிய அவர் ஹெலிகாப்டர் - கடும் பனியால் மீட்பில் சிக்கல்!
Iran President : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் அவரது வெளியுறவு மந்திரி பயணித்த ஹெலிகாப்டர், அஜர்பைஜான் எல்லைக்கு சென்று திரும்பும் வழியில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இந்த ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து ரைசி மற்றும் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஒரு அதிகாரி கூறினார். "நாங்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், ஆனால் விபத்து நடந்த இடத்திலிருந்து வரும் தகவல்கள் மிகவும் கவலைக்குரியவை" என்று அந்த அதிகாரி கூறினார்.
அங்கு நிலவும் மோசமான வானிலை, மீட்பு முயற்சிகளை சிக்கலாக்குகிறது என்று மாநில செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ரைசிக்காக பிரார்த்தனைகள் நடத்தப்படுவதை பார்க்கமுடிகிறது. கடுமையான மூடுபனியில் மலைப் பகுதியில் நடந்தே சென்று தேடும் மீட்புக் குழுவினரின் நேரடி ஒளிபரப்பை அந்நாட்டு ஊடகம் ஒன்று ஒளிபரப்பி வருகின்றது.
Iran : ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி - என்ன நடந்தது? முழு விவரம் இதோ!
63 வயதான அவர் 2021ல் தனது இரண்டாவது முயற்சியில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் பதவியேற்றதிலிருந்து அறநெறிச் சட்டங்களை கடுமையாக்க உத்தரவிட்டார், அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஒடுக்குமுறையை அமல்படுத்தினார். உலக வல்லரசுகளுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் அவர் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இரட்டை அரசியல் அமைப்பில், மதகுரு ஸ்தாபனத்திற்கும், அரசாங்கத்திற்கும் இடையில் பிளவுபட்டுள்ள நிலையில், அனைத்து முக்கியக் கொள்கைகளிலும் இறுதிக் கருத்தைக் கூறுவது அதிபர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ரைசி அஜர்பைஜான் எல்லையில் ஒரு கூட்டுத் திட்டமான கிஸ்-கலைசி அணையைத் திறந்து வைத்தார்.
மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்! பில்கேட்ஸ் உடன் டைம் டிராவல் செய்து பிறந்தநாள் கொண்டாடிய ஜூக்கர்பெர்க்!